நிரவ்மோடியின் ஜாமின் மனுவை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்த லண்டன் நீதிமன்றம்!

அவரை இந்தியாவுக்குத் திருப்பிக்கொண்டு வருவதற்கு இந்திய அரசு தொடர்ச்சியாக முயற்சி செய்துவருகிறது.

news18
Updated: March 29, 2019, 9:19 PM IST
நிரவ்மோடியின் ஜாமின் மனுவை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்த லண்டன் நீதிமன்றம்!
நிரவ் மோடி
news18
Updated: March 29, 2019, 9:19 PM IST
லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைர வியாபாரி நிரவ்மோடியின் ஜாமின் மனுவை அந்நாட்டு நீதிமன்றம் இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்துள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று திருப்பிச்செலுத்தாமல் லண்டனுக்குத் தப்பி ஓடினார். அவரை இந்தியாவுக்குத் திருப்பிக்கொண்டு வருவதற்கு இந்திய அரசு தொடர்ச்சியாக முயற்சி செய்துவருகிறது.

லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி இங்கிலாந்து போலீசாரால் மார்ச் 20-ம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது கைதிகள் நெருக்கடி மிகுந்த வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக, ஒருமுறை ஜாமின் கேட்டு தாக்கல் செய்த அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவுக்கு நாடுகடத்துதல் தொடர்பாக வழக்கு இன்று லண்டன் கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது அவர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இதுதொடர்பான அடுத்த விசாரணையை ஏப்ரல் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Also see:
First published: March 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...