ஹோம் /நியூஸ் /உலகம் /

நீரவ் மோடியின் வெளிநாட்டு சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை

நீரவ் மோடியின் வெளிநாட்டு சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை

நீரவ் மோடி

நீரவ் மோடி

  • News18
  • 1 minute read
  • Last Updated :

பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் முறைகேடு வழக்கில் நீரவ் மோடிக்கு சொந்தமான 637 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி ரூபாய் மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும் வெளிநாடு தப்பிச் சென்றனர். இது குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறது. நீரவ் மோடி லண்டனில் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரை இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனிடையே, நீரவ் மோடி நேரில் ஆஜராகாததால் நீதிமன்ற உத்தரவுப்படி இந்தியா மற்றும் நான்கு வெளி நாடுகளில் உள்ள அவரது சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கடந்த மார்ச் மாதம், நீரவ் மோடிக்குச் சொந்தமான 36 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கியது.  அதைத் தொடர்ந்து, தற்போது வெளிநாடுகளில் இருக்கும் சொத்துகளையும் முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

அமலாக்கத்துறை பறிமுதல் செய்த நீரவ் மோடியின் வைர மோதிரங்கள்.

நியூயார்க்கில் உள்ள சொகுசு அபார்ட்மென்ட், நகைகள் உள்ளிடவை முடக்கப்பட்ட சொத்துகளில் அடங்கும். இதன் மதிப்பு சுமார் ரூ.637 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: BNB, Nirav modi assets seized, Pnb, Rs.637 Cr assets