ஹோம் /நியூஸ் /உலகம் /

ரஷ்ய பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச்சூடு - 5 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

ரஷ்ய பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச்சூடு - 5 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

கோப்புப் படம்

கோப்புப் படம்

பள்ளியில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கி சூடு நடத்தி இறுதியில் தன்னையும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, Indiamoscowmoscow

  ரஷ்யாவில் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ரஷ்யாவின் இஸ்ஹிவெஸ்க் என்ற பகுதியில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.

  அந்நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து 960 கிமீ தொலைவில் உள்ள இந்த நகரத்தில் சுமார் 6.4 லட்சம் பேர் வசிக்கின்றனர். அங்குள்ள பள்ளியில் 1 முதல் 11 வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். சுமார் 1000 மாணவர்கள், 80 ஆசிரியர்கள் உள்ள இந்த பள்ளியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இன்று காலை புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.

  திடீரென்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றதால் அனைவரும் சிதறி ஓடிய நிலையில், துப்பாக்கி குண்டு பாய்ந்த பலர் சரிந்து விழுந்துள்ளனர். இந்த சம்பவத்தில் 5 குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

  இதையும் படிங்க: கோடிகளில் ஒன்று - ரகசிய கேமராவில் சிக்கிய வெள்ளை நிற கரடி!

  பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தி நபர் இறுதியில் தன்னைத் தான சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளனார். இந்த நபரின் நோக்கம் மற்றும் அடையாளங்கள் வெளிவரவில்லை. இந்நிலையில் பள்ளியில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு, காவல்துறை பாதுகாப்பு வலையத்தில் சம்பவ இடம் கொண்டுவரப்பட்டுள்ளது. பதறவைக்கும் இந்த குற்றச்செயல் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என  அந்த பிராந்தியத்தின் ஆளுநர் அலெக்சான்டர் தெரிவித்துள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Gun fire, Gun shoot, Russia, School