கிளம்பத் தயாரான விமானத்தின் இறக்கையில் ஏறிய மர்ம நபர்!

News18 Tamil
Updated: July 21, 2019, 4:07 PM IST
கிளம்பத் தயாரான விமானத்தின் இறக்கையில் ஏறிய மர்ம நபர்!
விமான இறக்கையில் ஏறிய மர்ம நபர்
News18 Tamil
Updated: July 21, 2019, 4:07 PM IST
புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் எஞ்சின் மீது ஒருவர் ஏறியதால் பயணிகள் பீதி அடைந்தனர்.

நைஜீரியாவில் உள்ள லாகோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அஸ்மான் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான, விமானம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை புறப்படத் தயராக இருந்தது. ஓடுபாதையில் நின்றிருந்த விமானம், கட்டுப்பாட்டு அறையில் இருந்து, புறப்படுவதற்கான சிக்னலை எதிர்பார்த்து காத்திருந்தது.

அப்போது திடீரென்று விமானத்தின் இடது பக்க இறக்கை மீது ஏறி நின்றபடி மர்ம நபர் ஒருவர், விமானத்துக்குள் நுழைய முயன்றார். இதை, விமான பயணிகள் பார்த்ததும் பீதி அடைந்தனர். பயங்கரவாதியாக இருப்பாரோ என நினைத்து கூச்சலிட்டனர். உடனடியாக விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர் விமானத்தின் எஞ்சினை நிறுத்தினார்.

போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் விரைந்து வந்து அந்த மர்மநபரை கைது செய்தனர். அவர் யார் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. அவர் ஏன் அப்படி செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் விமானத்தின் இறக்கையில் ஏறி நிற்பதை விமான பயணிகள் சிலர் புகைப்படம் எடுத்துள்ளனர். அந்தப் படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
First published: July 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...