தந்தையின் கடைசி ஆசை: பிஎம்டபிள்யு காரில் அடக்கம் செய்த பாசமகன்

news18
Updated: June 13, 2018, 4:51 PM IST
தந்தையின் கடைசி ஆசை: பிஎம்டபிள்யு காரில் அடக்கம் செய்த பாசமகன்
பிஎம்டபிள்யு காரில் அடக்கம்
news18
Updated: June 13, 2018, 4:51 PM IST
தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற புத்தம்புதிய  பிஎம்டபிள்யு காரில் அடக்கம் செய்த மகனின் செயல் உலக அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தங்களது பெற்றோரின் கடைசி ஆசைகளுக்காக வித்தியாச வித்தியாசமான செயல்களை செய்யும் பிள்ளைகளை பார்த்திருப்போம். அதில் நைஜீரியாவை சேர்ந்த அஜுபூக்கி என்பவர் தனது தந்தை இறந்த பின் அவரை புதைக்க சவப்பெட்டியை பயன்படுத்துவதற்கு பதிலாக புதிதாக கார் ஒன்றை வாங்கி அதில் புதைத்துள்ளார்.

விலை உயர்ந்த காரான பிஎம்டபிள்யுவில் பயணிப்பது அவரது  தந்தையின் கடைசி ஆசையாக இருந்தது. ஆனால் சில சிக்கல்களால் அவர் உயிரோடு இருந்தவரை அந்த மகனால் கார் வாங்க முடியவில்லை.

இதையடுத்து தந்தைக்கு கார் வாங்கி தரமுடியவில்லை என்ற கவலையை நீக்க அஜுபூக்கி 57 லட்சம் மதிப்புள்ள புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். பின் அதிலேயே தனது தந்தையை வைத்து காரை மண்ணுக்குள் மூடியுள்ளார்.

இவரது இந்த செயலுக்கு பலர் உணர்ச்சி வசப்பட்டாலும் இறந்தபின் இதுபோன்று செய்திருக்க வேண்டாம். நாட்டில் பலர் உணவில்லாமல் தவிர்த்து வருகின்றனர். தந்தையின் பெயரால் அவர்களுக்கு உதவி செய்திருக்கலாம் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

First published: June 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...