அதிபரின் ட்விட் நீக்கம்: ட்விட்டரையே தடை செய்த நாடு!

ட்விட்டருக்கு தடை

நைஜீரியாவில் கடந்த 1967-70ம் ஆண்டுகளில் நிகழ்ந்த உள்நாட்டு போரை மேற்கோள் காட்டியே புஹாரி இந்த ட்விட்டை பதிவிட்டிருந்தார்.  இந்த போரில் 10 முதல் 30 லட்சம் மக்கள் வரை உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது

  • Share this:
அதிபரின் ட்விட் நீக்கம் செய்யப்பட்டதையடுத்து நைஜீரியா நாட்டில் ட்விட்டருக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்றாக ட்விட்டர் உள்ளது. உலகம் முழுவதும் ஏறக்குறைய 35 கோடி மாதந்திர பயனாளிகள் ட்விட்டரை பயன்படுத்தி வருகின்றனர்.  இத்தகைய பிரபலமான ட்விட்டர் சமூக வலைதளம் அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்குவதுடன். இந்தியாவில் வேளாண் போராட்டத்தின்போது அரசுக்கு எதிரான ட்விட்களை நீக்க கூறி ட்விட்டர் நிறுவனத்துக்கு அழுத்தம் தரப்பட்டது.

இதேபோல், அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்தபோது ட்விட்டர் நிறுவனத்துக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். இதேபோல், டிரம்ப் தவறாக செய்திகளை பதிவிட்டு வருவதாக குற்றம்சாட்டிய ட்விட்டர் நிறுவனம், டிரம்ப்பின் டிவிட்களை டெலிட் செய்ததோடு, அவரது கணக்கையும் முடக்கியது. இது மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க... வேறொருவருடன் திருமணம்: சமூக ஊடகத்தால் கணவரிடம் சிக்கிய மனைவி..

இந்நிலையில், தற்போது புதிய சிக்கலில் அந்நிறுவனம் சிக்கியுள்ளது.  நைஜீரிய நாட்டின் அதிபராக உள்ள முகமது புஹாரி அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு உள்நாட்டு யுத்தம் ஏற்படும் சூழல் நிலவுகிறது.

இது தொடர்பாக முகமது புஹாரி தனது ட்விட்டர் பகக்த்தில்,  தற்போது தவறாக நடந்துகொள்பவர்கள் பலரும் மிகவும் இளம் வயதினர். நைஜீரிய உள்நாட்டுப் போரின் போது ஏற்பட்ட அழிவு மற்றும் உயிர் இழப்புகள் குறித்து அறிந்திருக்க மாட்டார்கள்.  அவர்களுக்கு அவர்களின் மொழியில் புரிய வைப்போம்” என்று பதிவிட்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நைஜீரியாவில் கடந்த 1967-70ம் ஆண்டுகளில் நிகழ்ந்த உள்நாட்டு போரை மேற்கோள் காட்டியே அவர் இந்த ட்விட்டை பதிவிட்டிருந்தார்.  இந்த போரில் 10 முதல் 30 லட்சம் மக்கள் வரை உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில், அதிபரின்  இந்த ட்விட் வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக சர்ச்சை எழுந்தது.

மேலும் படிக்க.. சாலையில் அடிபட்டு கிடந்த கரப்பான்: அடுத்து நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்..

இதையடுத்து, அதிபர் முகமது புஹாரியின் ட்விட்டை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது. இதனால், ஆத்திரமடைந்த நைஜீரிய அரசு, தங்கள் நாட்டில் ட்விட்டர் சமூக வலைதளத்துக்கு தடை விதித்துள்ளது.  நைஜீரிய அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Murugesh M
First published: