Home /News /international /

நைஜீரியாவில் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 200 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 200 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பள்ளிகள், கல்லூரிகள் மீது கொள்ளைக் கும்பல் தாக்குதல் நடத்தி, நூற்றுக்கணக்கான மாணவர்களை கடத்திச் சென்றனர்.

நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பள்ளிகள், கல்லூரிகள் மீது கொள்ளைக் கும்பல் தாக்குதல் நடத்தி, நூற்றுக்கணக்கான மாணவர்களை கடத்திச் சென்றனர்.

நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பள்ளிகள், கல்லூரிகள் மீது கொள்ளைக் கும்பல் தாக்குதல் நடத்தி, நூற்றுக்கணக்கான மாணவர்களை கடத்திச் சென்றனர்.

மேலும் படிக்கவும் ...
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.

நைஜீரியாவின் வடமேற்கில் அமைந்துள்ள ஜம்பரா மாகாணத்தில் கொள்ளையர்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இங்கு அவர்கள் மறைவிடங்களை ஏற்படுத்தி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை குறிவைத்து நைஜீரிய ராணுவம் கடந்த வாரம் வான்வெளித் தாக்குதலை நடத்தியது.

பொதுமக்கள் அளித்த உளவுத் தகவலின் அடிப்படையில் ராணுவம் இந்த தாக்குதலை நடத்தியதாக கருதிய கொள்ளையர்கள், பயங்கர ஆயுதங்களுடன் வந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இதையும் படிங்க : உலக நாடுகளை மிரட்டும் கொரோனா... சராசரியாக நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பேர் வரை பாதிப்பு

இதுகுறித்து நைஜீரிய அரசின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது-

ஜம்பாராவின் ஜாம்ரே என்ற கிராமத்தில் நேற்று இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. படுகொலை சம்பவத்தை தொடர்ந்து மக்கள் தங்களது சொந்த ஊரை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 200-யை தாண்டும் என மதிப்பிட்டுள்ளோம். ராணுவம் கொள்ளையர்கள் மீது நடத்திய தாக்குதலில் 2 முக்கிய தலைவர்கள் உள்பட 100-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இதன்பின்னர் கொள்ளையர்களின் குறி பொதுமக்கள் மீது திரும்பியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்து அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 10 கிராமங்களை கடந்த வாரம் அவர்கள் சூறையாடியுள்ளனர்.

இதையும் படிங்க : Deltacron : ஒமைக்ரானை தொடர்ந்து புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு... சைப்ரஸ் நாட்டில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தகவல்

கண்டவர்களை சுட்டுத் தள்ளும் போக்கை, கொள்ளையர்கள் கடைபிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொள்ளையர்களால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அரசு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டு, கொள்ளையர்களை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த தீவிரவாத செயல்பாடுகளை நைஜீரிய அரசு ஒருபோதும் பொருத்துக் கொள்ளாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பள்ளிகள், கல்லூரிகள் மீது கொள்ளைக் கும்பல் தாக்குதல் நடத்தி, நூற்றுக்கணக்கான மாணவர்களை கடத்திச் சென்றனர். அவர்களில் பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்ட நிலையில், சிலர் இன்னமும் அவர்களது பிடியில் இருக்கிறார்கள். இந்த சம்பவங்கள் சர்வதேச அளவில் கடந்த ஆண்டு பேசப்பட்டு, நைஜீரிய அரசுக்கு அவப்பெயரை தேடித் தந்தன.

கடந்த வாரத்தில் மட்டும் 537 கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், 374 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நைஜீரிய அரசு கூறியுள்ளது.

வனப்பகுதியில் முகாம்களை அமைத்து கொள்ளையர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் ராணுவம் நடத்திய தாக்குதலில் முக்கிய கொள்ளை கும்பல் தலைவர் பெல்லோ துர்ஜிக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. தொடர் பின்னடைவால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள், மனிதத் தன்மையற்ற தாக்குதலை நடத்தியுள்ளனர்.
Published by:Musthak
First published:

Tags: Nigeria

அடுத்த செய்தி