ஹோம் /நியூஸ் /உலகம் /

இருளில் மூழ்கிய புளோரிடா… கோர தாண்டவமாடிய நிகோல் புயல்…

இருளில் மூழ்கிய புளோரிடா… கோர தாண்டவமாடிய நிகோல் புயல்…

புயல்

புயல்

Florida Nicole hurricane | நவம்பர் மாதத்தில் மிகவும் அரிதாக ஏற்படும் நிகழ்வாக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை புயல் ஒன்று புரட்டிப் போட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, IndiaAmericaAmericaAmericaAmericaAmerica

  நவம்பர் மாதத்தில் மிகவும் அரிதாக ஏற்படும் நிகழ்வாக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை புயல் ஒன்று புரட்டிப் போட்டுள்ளது. இதனால் லட்சக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

  அமெரிக்காவின் கடலோர மாவட்டங்கள் புயலின் போது மிகப்பெரிய சேதங்களை ஏற்படுத்துவது வழக்கம். அந்த வகையில் இப்போது புயலால் பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காவின் புளோரிடா மாகாணம். வழக்கமாக நவம்பர் மாதங்களில் அமெரிக்காவில் புயல் தாக்காது. ஆனால் அரிதான நிகழ்வாக நேற்று புளோரிடா மாகாணத்தை நிகோல் புயல் தாக்கியுள்ளது.

  புயலின் போது மணிக்கு 125 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. கடலில் அலைகள் பல மீட்டர் உயரத்திற்கு எழுந்தது. இதனால் கடலோரத்தில் இருந்த குடியிருப்பு பகுதியில் கடல்நீர் புகுந்து வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. அதிவேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் விமான நிலையங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

  கடலோரத்தில் இருந்த டிஸ்னி வேர்ல்டு மற்றம் யுனிவர்சல் ஆர்லண்டோ ரிசார்ட் ஆகியவையும் மூடப்பட்டன. நிகோல் புயல் வீசும் என அறிவிக்கப்பட்டிருந்ததால் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த ராக்கெட் ஏவும் நிகழ்வும் ஒத்திவைக்கப்பட்டது. புளோரிடா மாகாணத்தின் 67 நகர்ப்புற பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டிருந்தது.

  பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. புளோரிடா மாகாணம் முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

  அதிவேக காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் சுமார் 3 லட்சம் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இருளில் மூழ்கின. நிகோல் புயல் கரையை நெருங்கியதை தொடர்ந்து இரவு முழுவதும் புளோரிடா மாகாணம் முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்தது.

  Also see... தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

  நிகோல் புயல் ஜியார்ஜியா மற்றும் கரோலினாவை நோக்கி நகர்ந்து இரண்டு நாட்களில் வலுவிழக்கும் என புளோரிடா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே புயல் இந்த வார இறுதிக்குள் ஓகியோ, பெனிசில்வேனியா மற்றும் நியூயார்க் நகரங்களை தாக்கக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  புளோரிடாவை அதிதீவிர புயலான இயான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாக்கியது. இயான் புயல் தாக்கியதில் பல லட்சம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டதுடன், 140க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர்.

  அந்த சோகம் முடிவதற்குள் புளோரிடா மாகாணத்தை அடுத்த புயலான நிகோல் தாக்கியுள்ளது. நிகோல் புயலால் பெரிய அளவுக்கு சேதம் இல்லை என்றாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Cyclone, Florida, USA