குளிரில் வாடிய இகுவானாவிற்கு ஸ்வெட்டர், மஃப்ளர் அணிவித்த பெண்!

குளிரில் வாடிய இகுவானாவிற்கு ஸ்வெட்டர், மஃப்ளர் அணிவித்த பெண்!
இகுவானா
  • News18
  • Last Updated: February 3, 2020, 1:31 PM IST
  • Share this:
குளிரில் வாடிய இகுவானாவிற்கு ஸ்வெட்டர், மஃப்ளர் அணிவித்த பெண்ணின் செயல் அனைவரது பாராட்டையும் பெற்று வருகின்றது.


பேரோந்தி (Iguana)என்பது வெப்ப மண்டலத்தில் வாழும் முதுகெலும்புள்ள ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு பல்லி ஆகும். இது நடு அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவின் வட பகுதியிலும் கரிபியத் தீவுகளிலும் இயற்கையாகக் காணப்படுகின்றது.


அதிக அளவாக ஏறத்தாழ இரண்டு மீட்டர் நீளத்திற்கு வளரக்கூடியது. ஆறு கிலோகிராம் வரை எடை இருக்ககூடியது. இதனை செல்லப் பிராணிகளாகவும் சிலர் வளர்த்து வருகின்றனர்.இதனிடையே தென் புளோரிடாவில் வசித்து வரும் லோரி பேலி எனும் பெண் ஒருவர் மோசமான வானிலையில் சிக்கி கொண்ட இகுவானாவிற்கு ஸ்வெட்டர், மஃப்ளர் அணிவித்து காப்பாற்றியுள்ளார். விலங்கினங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும் தி டூ டூ நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.


இது தொடர்பாக தி டூ டூவிற்கு பதிலளித்த அவர், காலையில் நான் கண்விழித்த போது வீட்டின் வெளியில் இகுவானா ஒன்று கடும் குளிரை தாங்க முடியாமல் உடல் நலம் சரி இல்லாமல் இருந்தது. அதன் வெப்பநிலையை அதிகரிக்க இவ்விதம் செய்ததாக தெரிவித்தார்.


இகுவானவிற்கு உதவி செய்ததில் மகிழ்ச்சி எனவும், இகுவானா நன்றி உணர்வோடு செயல்படுவதாகவும் கூறியுள்ளார். மேலும் இகுவானாவிற்கு தொப்பி வைக்க முடிவு செய்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
First published: February 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading