கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் விதத்தில் கனடாவில் உள்ள உலகின் மிகப்பெரிய நயாகரா நீர்வீழ்ச்சி இந்திய மூவர்ண கொடியின் நிறத்தில் ஒளிரூட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை காரணமாக தினசரி கொரோனா பாதிப்பும், உயிரிழப்பு எண்ணிக்கைகளும் சாதனை அளவை எட்டி வருகின்றன. கொரோனாவின் 2வது அலையைக் காட்டிலும் தற்போதைய பாதிப்பு 3 - 4 மடங்கு அதிகரித்திருக்கிறது. அதே போல உயிரிழப்புகளும் கட்டுக்கடங்காமல் ஏற்பட்டு வருகின்றன. தினந்தோறும் லட்சக்கணக்கிலானவர்கள் பாதிப்படைவதால் அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் இடவசதி இல்லாமலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காமலும் தட்டுப்பாடு நிலை ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளும், மயானங்களும் நிரம்பி வழியும் வீடியோக்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன. இதன் காரணமாக இந்தியாவிற்கு பல்வேறு நாடுகளும் தங்களின் ஆதரவுக் கரங்களை நீட்டி வருகின்றன. தேவையான மருத்துவ உதவிகளையும், மருத்துவ தளவாடங்களையும் அனுப்பி வைத்து இந்தியா மீதான தங்களின் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இந்தியாவின் நட்பு நாடான கனடாவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியான நயாகராவில் இந்திய தேசிய மூவர்ணக் கொடியின் நிறத்தில் ஒளிரூட்டி கொரோனாவிற்கெதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர்.
India is currently facing a surge in cases and losses of life resulting from COVID-19. In a display of solidarity and hope for India, Niagara Falls will be illuminated tonight from 9:30 to 10pm in orange, white and green, the colours of the flag of India. #StayStrongIndiapic.twitter.com/o0IIxxnCrk
அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள நயாகரா நீர்வீழ்ச்சியானது உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளுள் ஒன்றாகும். இதில் கனடா பகுதியில் ஆண்டாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியில் இந்தியாவின் மூவர்ண கொடியில் ஒளிரூட்டியுள்ளது கனடா அரசு.
இது குறித்து நயாகரா நீர்வீழ்ச்சியின் அதிகார ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவில், “கொரோனா தொற்றின் காரணமாக தற்போது இந்தியா, அதிகப்படியான பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியாவுடனான ஒற்றுமை மற்றும் நம்பிக்கையின் வெளிப்பாடாக, நயாகரா நீர்வீழ்ச்சி இன்று இரவு 9:30 முதல் 10 மணி வரை (கனடா நேரப்படி) ஆரஞ்சு, வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில், இந்தியாவின் கொடியின் வண்ணங்களில் ஒளிரும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. என்னற்ற லைக்குகளையும், ஷேர்களையும் அந்த பதிவு பெற்றுள்ளது.
⭐️As #India battles the gruesome war against #COVID19 , its friend #UAE sends its best wishes
முன்னதாக கடந்த வாரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கஃலிபா, இந்திய மூவர்ண கொடியின் நிறத்தில் ஒளிரூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.