நிலநடுக்கத்தின்போதும், புன்னகையுடன் பதற்றமில்லாமல் பேசிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா..! (வைரலாகும் வீடியோ)

கிறிஸ்ட் சர்ச் பயங்கரவாத தாக்குதல் மற்றும்  கொரோனா வைரஸ் நோயை தொற்றை நிர்வகித்த  விதமும், அவரது நிதானமும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நிலநடுக்கத்தின்போதும், புன்னகையுடன் பதற்றமில்லாமல் பேசிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா..! (வைரலாகும் வீடியோ)
ஜெசிந்தா ஆர்டன்
  • Share this:
நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் சில நொடிகள் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, தொலைக்காட்சி நேரலையில் பேசிக்கொண்டிருந்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் பதற்றமில்லாமல் புன்னகையுடன் அந்த நேரத்தைக் கையாண்ட காணொளி இணையத்தில் மிகப் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.நியூசிலாந்து தலைநகர் வெல்லிங்டனில் இன்று 5.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது. பாதிப்பு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. நிலநடுக்கத்தின்போது, தொலைக்காட்சி நேரலையில் பதற்றம் எதுவுமின்றி பேசிய நியுசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், ”இங்கு கொஞ்சம் நிலநடுக்கத்தை உணர்ந்து வருகிறோம். கொஞ்சம் குறைவான நிலநடுக்கமாகவே தோன்றுகிறது. என் பின்னால் பொருட்கள் அசைவது உங்களுக்குத் தெரியலாம். பாராளுமன்றக் கட்டிடம் கொஞ்சம் அதிகமாகவே அசைகிறது” என தனது இயல்பான புன்னகை மாறாமல் பேசினார் ஜெசிந்தா ஆர்டன். நிதானமாக பிரச்சனைகளைக் கையாளும் அரசியல் தலைவராக போற்றப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


நியூசிலாந்து நாட்டின் மிகப்  பிரபலமான பிரதமர் ஆர்டெர்ன் என  கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவித்தது. கிறிஸ்ட் சர்ச் பயங்கரவாத தாக்குதல் மற்றும்  கொரோனா வைரஸ் நோயை தொற்றை நிர்வகித்த  விதமும், அவரது நிதானமும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
First published: May 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading