முகப்பு /செய்தி /உலகம் / கொரோனாவின் மையமாக மாறிய நியூயார்க்... தற்காலிக மருத்துவமனையாகிய கப்பல்!

கொரோனாவின் மையமாக மாறிய நியூயார்க்... தற்காலிக மருத்துவமனையாகிய கப்பல்!

தற்காலிக மருத்துவமனையாகிய கப்பல்.

தற்காலிக மருத்துவமனையாகிய கப்பல்.

நியூயார்க் நகரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1200ஐ தாண்டியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பின் மையமாக விளங்கும் நியூயார்க் நகரம், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.

கொரோனாவால் ஒரே நாளில் 250 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து நியூயார்க் நகரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1200ஐ தாண்டியுள்ளது. நியூயார்க் மருத்துவமனைகள் கொரானா பாதித்தவர்களால் நிரம்பி வழியும் நிலையில், நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மன்ஹாட்டன் மத்திய பூங்காவில் 68 படுக்கைகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது.

இதேபோல், அமெரிக்க கப்பற்படையின் சார்பாக, எண்ணெய் கப்பல் ஒன்று மிதக்கும் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் சுதந்திர தேவி சிலையைக் கடந்தபோது, ஹட்சன் நதியின் இரு கரையிலிருந்தும் நின்று மக்கள் கைதாட்டி வரவேற்றனர்.

Also see:

First published:

Tags: America, CoronaVirus, NewYork