சுழன்று அடிக்கும் டோரியான் புயல்! அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவுக்கு மிரட்டல்

புயல் காரணமாக அபகோஸ் தீவில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் தீவை விட்டு வெளியேறி தலைநகர் நஸ்ஸாவிற்கு செல்கின்றனர். 

சுழன்று அடிக்கும் டோரியான் புயல்! அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவுக்கு மிரட்டல்
டோரியான் புயல் பாதிப்பு
  • News18
  • Last Updated: September 8, 2019, 8:31 PM IST
  • Share this:
வடக்கு அட்லாண்டிக் கடற்கரையோரம் உள்ள நாடுகளை சூறையாடிவரும் டோரியன் புயல் பஹாமஸ், அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவைத் தாக்கியுள்ளது. பஹாமஸ் தீவிற்கு இந்தியா 7 கோடியே 16 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.

வடக்கு அட்லாண்டிக் கடலில் உருவாகி கரையை கடக்காமல் சுழன்றடித்துவரும் டோரியன் புயல் கடற்கரையோரம் உள்ள நாடுகளை துவம்சம் செய்துவருகிறது. கடந்த 1-ஆம் தேதி மணிக்கு 295 கிலோமீட்டர் வேகத்தில் பஹாமஸ் தீவைத் தாக்கிய டோரியன், அந்த தீவையே உருக்குலைத்தது. பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கின.

பஹாமாஸில் 43 பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணிகள் நடந்துவருகின்றன. 70 ஆயிரம் பேர் முகாம்களில் தஞ்சமடைந்தனர். புயல் காரணமாக அபகோஸ் தீவில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் தீவை விட்டு வெளியேறி தலைநகர் நஸ்ஸாவிற்கு செல்கின்றனர்.  பேரழிவிற்குள்ளான பஹாமஸ் தீவிற்கு இந்திய அரசு 7 கோடியே 16 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.


பஹாமஸை அடுத்து அமெரிக்காவின் ஃபுளோரிடா, வடக்கு கரோலினா மாகாணங்களை டோரியன் புயல் தாக்கியது. கரோலினாவில் 2 லட்சத்திற்கு மேற்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கின. வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டுவருகின்றன. தொடர்ந்து கனடாவின் நோவா ஸ்கோடியாவைத் தாக்கிய டோரியன் கரையில் இருந்து 225 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு அட்லாண்டிக் கடலில் நிலைகொண்டுள்ளது. ஹாலிஃபேக்ஸ் நகரில் 4 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கனடாவில் நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் கிழக்கு லாப்ரடோர் மாகாணத்தை நோக்கி புயல் நகர்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Also see:

First published: September 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்