முகப்பு /செய்தி /உலகம் / ஆடு, மாடு வளர்ப்போருக்கு வரி - கால்நடைகள் வெளியேற்றும் 'வாயு' பாதிப்பை தடுக்க நியூசிலாந்து புது திட்டம்

ஆடு, மாடு வளர்ப்போருக்கு வரி - கால்நடைகள் வெளியேற்றும் 'வாயு' பாதிப்பை தடுக்க நியூசிலாந்து புது திட்டம்

கால்நடை வளர்த்தால் வரி

கால்நடை வளர்த்தால் வரி

நியூசிலாந்து நாட்டில் மக்கள்தொகையை விட கால்நடைகளின் எண்ணிக்கை அதிகம்.

  • Last Updated :

புவி வெப்பமயமாதல் பிரச்னைக்கு பிரதான காரணமாக விளங்குபவை பசுமைக்குடில் வாயு. இந்த பசுமை குடில் வாயுக்களின் மீத்தேன் வாயு முக்கியமானது. இந்த மீத்தேன் வாயு ஆடு, மாடு போன்ற கால்நடைகள் மூலம் வெளியேறுகின்றன. ஆடு, மாடுகள் அதன் இறைச்சி மற்றும் கழிவு(சாணம், அபான வாயு போன்றவை) மூலம் இந்த மீத்தேன் வாயு அதிக அளவில் வெளியேறுகின்றன. இந்நிலையில், நியூசிலாந்து அரசு பசுமை குடில் வாயு வெளியேற்றத்தை குறைக்க கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு வரி விதிக்க புதிய சட்டம் ஒன்றை இயற்ற உள்ளது.

அதன்படி, நியூசிலாந்து நாட்டில் பசுமை குடில் வாயுக்கள் உமிழ்வை குறைக்கும் விதமாக அந்நாட்டில் ஆடு, மாடு போன்ற கால்நடை வளர்ப்போருக்கு வரி விதிக்க அந்நாடு முடிவெடுத்துள்ளது. இந்த கால்நடைகளின் இறைச்சி மற்றும் கழிவுகள் மீத்தேன் வாயுவை வெளியிடுகின்றன. பசுமை குடில் வாயுவில் முக்கிய பங்கு வகிக்கும் மீத்தேன் வெளியேற்றத்தை தடுக்கவே நியூசிலாந்து அரசு அந்நாட்டில் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு வரி விதிப்பு மேற்கொள்ளவுள்ளது. நியூசிலாந்து நாட்டில் மக்கள்தொகையை விட கால்நடைகளின் எண்ணிக்கை அதிகம். அந்நாட்டின் மக்கள்தொகை சுமார் 50 லட்சமாக உள்ள நிலையில், அங்கு ஒரு கோடிக்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. அத்துடன் 2.6 கோடி செம்மறி ஆடுகள் உள்ளன.

எனவே அந்நாட்டின் பசுமை வாயு உமிழ்வில் அதிக பங்களிப்பு விலங்குகள் மூலமே ஏற்படுகிறது. எனவே, அந்நாட்டின் உமிழ்வு வெளியேற்றத்தை 2050ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜியமாக்க அந்நாட்டு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது தொடர்பாக நியூசிலாந்தின் கால நிலை மாற்ற அமைச்சர் ஜேம்ஸ் ஷா கூறுகையில், 'மீத்தேன் வெளியேற்றத்தை குறைக்க வேளாண்துறை வெளியேற்றத்திற்கு வரி விதிப்பது முக்கிய நடவடிக்கையாகும். மேலும், மீத்தேன் வெளியேற்றத்தை குறைக்க விவசாயிகள் தாமாக முன்வந்து நடவடிக்கைகள் மேற்கொண்டால் அவர்களுக்கு கூடுதல் உதவித்தொகை வழங்கப்படும்' என்றார்.

அத்துடன் இந்த திட்டத்தின் மூலம் திரட்டப்படும் நிதியில் விவசாயத்துக்கான ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் என அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.கால நிலை மாற்றம் தொடர்பாக சர்வதேச நாடுகள் உச்சி மாநாடுகளை நடத்தி வருகின்றன. 26 ஆவது காலநிலை உச்சி மாநாட்டில், 2030க்குள் வாயு வெளியேற்றத்தை 30 சதவீதம் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதையும் படிங்க: ரஷ்ய படையெடுப்புக்குப் பின் 287 குழந்தைகள் மரணம் - உக்ரைன் அரசு அதிர்ச்சி தகவல்

top videos

    இதில், நியூசிலாந்து உள்பட 100க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டன. பசுமை வாயு உமிழ்வில் கார்பன் டை ஆக்சைடுக்கு அடுத்தபடியாக மீத்தேன் தான் உள்ளது என்பதால் நியூசிலாந்து மீத்தேன் வெளியேற்றத்தை குறைக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    First published:

    Tags: New Zealand