ஹோம் /நியூஸ் /உலகம் /

2008-க்கு பின்னர் பிறந்தவர்கள் இனி சிகரெட்டை தொட முடியாது... வருகிறது அதிரடி சட்டம்

2008-க்கு பின்னர் பிறந்தவர்கள் இனி சிகரெட்டை தொட முடியாது... வருகிறது அதிரடி சட்டம்

புகையிலை சிகரெட் பயன்பாட்டை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்தாலும், வேப்பிங் எனப்படும் இ-சிகரெட்டுகளின் பயன்பாடு பல்வேறு நாடுகளில் கணிசமாக அதிகரித்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

2008-க்கு பின்னர் பிறந்தவர்கள் இனி சிகரெட்டே குடிக்க முடியாத வகையில் அடுத்த ஆண்டு முதல் புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

நியூசிலாந்து நாட்டில், சிகரெட் பயன்பாட்டை முற்றிலும் அகற்றுவதற்காக, தொலைநோக்கு திட்டத்தை அந்நாட்டு சுகாதார அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, புத்தாண்டு அன்று, 14 வயதுக்கு உட்பட்டவர்களாக (2008-க்கு பின்பு பிறந்தவர்களாக) இருக்கும் நியூசிலாந்து குடிமக்கள், சிகரெட் வாங்குவதற்கு ஆயுட்கால தடை விதிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் காலப்போக்கில், சிகரெட் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க முடியும் என்று நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

தற்போதைய புள்ளி விவரப்படி நியூசிலாந்தில் வயது வந்தவர்களில் 13 சதவீதம் பேர் சிகரெட் குடிக்கின்றனர். இதனை 5 சதவீதமாக 2025-க்குள் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து நியூசிலாந்து சுகாதார அமைச்சர் ஆயிஷா வெரால் கூறுகையில், 'இளைஞர்கள் சிகரெட் குடிக்கும் பழக்கத்தை ஆரம்பித்து விடவே கூடாது என நாங்கள் விரும்புகிறோம்' என்று கூறியுள்ளார். அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள மருத்துவர்கள் சங்கத்தினர், உலகுக்கே முன்மாதிரி திட்டத்தை நியூசிலாந்து வகுத்துள்ளதாக பாராட்டியுள்ளனர்.

Also Read : உலகின் 100 பவர் ஃபுல் பெண்கள் பட்டியல்... நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம்பிடித்தார்

இதேபோன்று சிகரெட் விற்பனை செய்வதிலும் கட்டுப்பாடுகளை நியூசிலாந்து அரசு கொண்டு வந்துள்ளது. நியூசிலாந்தில் தற்போது 8,000 கடைகளுக்கு மட்டுமே சிகரெட் விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டம் நடைமுறைக்கு வரும்போது இந்த எண்ணிக்கை 500 ஆக குறைந்து விடும்.

புகையிலை சிகரெட் பயன்பாட்டை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்தாலும், வேப்பிங் எனப்படும் இ-சிகரெட்டுகளின் பயன்பாடு பல்வேறு நாடுகளில் கணிசமாக அதிகரித்து வருகிறது.

Also Read : 3 ஆண்களுடன் தகாத உறவு.. தட்டிக்கேட்ட கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய பெண்

 நியூசிலாந்தில் பள்ளி மாணவர்கள் 19,000 பேரிடம் சமீபத்தில் சர்வே மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 25 சதவீதம் பேர், அன்றாடம் இ-சிகரெட்டை பயன்படுத்துவதாகவும், 15 சதவீதம் பேர் புகையிலை சிகரெட்டை பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளனர். இந்த எண்ணிக்கை வருங்காலத்தில் அதிகரித்து விடும் என்ற அக்கறையில் நியூசிலாந்து அரசு சட்டத்தை கடுமையாக்கி உள்ளது.

Published by:Musthak
First published:

Tags: E Cigarettes, New Zealand, Smoking