இந்திய பயணிகள் வருகைக்கு நியூசிலாந்து தடை!

இந்திய பயணிகள் வருகைக்கு நியூசிலாந்து தடை!

ஜெசிந்தா ஆர்டெர்ன்

இந்தியர்கள் மட்டுமல்லாது சொந்த நாட்டு பயணிகளும் இந்த காலகட்டத்தில் நியூசிலாந்துக்கு, இந்தியாவில் இருந்து வரக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
இந்தியாவில் கொரோனா பரவல் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் இருந்து பயணிகள் வருகைக்கு தடை விதித்தது நியூசிலாந்து அரசு.

இந்தியாவில் தற்போது கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் முதலாவது கொரோனா அலையின் உச்சகட்டத்தை இந்தியா சந்தித்தது. இதனிடையே இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 1.26 லட்சம் பேருக்கு நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இந்தியாவில் இருந்து நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொள்ள தடை விதித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார்.  இந்தியர்கள்,   வெளிநாட்டு பயணிகள் மட்டுமல்லாது சொந்த நாட்டு பயணிகளும் இந்த காலகட்டத்தில் நியூசிலாந்துக்கு, இந்தியாவில் இருந்து வரக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் ஆக்லாந்தில் இது தொடர்பாக செய்தியாளர்களிடையே பேசிய பிரதமர் ஜெசிஸ்ந்தா ஆர்டெர்ன், “தற்காலிகமாக இந்தியாவில் இருந்து பயணிகள் நியூசிலாந்துக்கு வருவதற்கு தடை விதிக்கப்படுவதாக கூறினார். இந்தியாவில் இருந்து வந்த பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். வெளிநாட்டு பயணிகளிடையே எழும் இது போன்ற சிக்கலை எப்படி களைவது என்பது குறித்து ஆலோசிப்போம்” என தெரிவித்தார்.

ஏப்ரல் 11 ம் தேதி முதல் 28ம் ஏப்ரல் தேதி வரை, இரண்டு வார காலத்திற்கு இந்திய பயணிகள் நியூசிலாந்துக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று நியூசிலாந்தில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது, அதில் 17 பேர் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என தெரிந்தது, இதன் பின்னரே இப்படியான ஒரு நடவடிக்கையை நியூசிலாந்து அரசு மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Published by:Arun
First published: