நியூசிலாந்து பூர்வகுடி அமைச்சராக சென்னையைச் சேர்ந்த பெண் நியமனம்

நியூசிலாந்து பூர்வகுடி அமைச்சராக சென்னையைச் சேர்ந்த பெண் நியமனம்

நியூசிலாந்து பிரதமருடன் பிரியங்கா

நியூசிலாந்து பூர்வகுடி அமைச்சராக பிரியங்கா ராதாகிருஷ்ணன் எனும் சென்னையில் பிறந்த பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

 • Share this:
  சென்னையைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன், நியூசிலாந்து நாட்டின் பூர்வகுடி மக்களுக்கான அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நியூஸிலாந்தில் பிரதமர் ஜெசிந்தா தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார். அதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் உட்பட 5 பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

  சென்னையில் பிறந்து கேரளாவில் வளர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன், சிங்கப்பூரிலும், அதன்பின் நியூஸிலாந்திலும் கல்வி பயின்றார். நியூஸிலாந்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்த பிறகு அங்குள்ள இந்திய வம்சாவளியினருக்காக குரல் கொடுத்து வந்தார்.


  அதன்பின் தொழிலாளர் கட்சியில் இணைந்து எம்.பியாக நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். தற்போது ஜெசிந்தா தலைமையிலான அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பெண்மணியாக இடம்பெற்றுள்ளார்.
  Published by:Rizwan
  First published: