ஹோம் /நியூஸ் /உலகம் /

இளைஞர்கள் சிகரெட் பிடிக்க வாழ்நாள் தடை - நியூசிலாந்து அரசு அதிரடி சட்டம்

இளைஞர்கள் சிகரெட் பிடிக்க வாழ்நாள் தடை - நியூசிலாந்து அரசு அதிரடி சட்டம்

நியூசிலாந்தில் சிக்ரெட் தடை அமல்

நியூசிலாந்தில் சிக்ரெட் தடை அமல்

புதிய சட்டத்தின் படி அந்நாட்டில் சிகரெட், புகையிலை விற்கும் கடைகளின் எண்ணிக்கை 6000இல் இருந்து 600ஆக குறைக்கப்படும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • intern, IndiaWellingtonWellington

நியூசிலாந்தை சிகரெட் புகை இல்லாத நாடாக மாற்ற அந்நாட்டு அரசு புதிய சட்டத்தை இயற்றியுள்ளது. அந்நாட்டில் பிரதமர் ஜெசிக்கா ஆர்டென் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்கவும், சிகரெட் புகையில்லா தலைமுறையை உருவாக்கவும் அரசு விரிவான திட்டத்தை உருவாக்க சிக்ரெட் தடை சட்டம் என்ற ஒன்றை அமல்படுத்தியுள்ளது.

அதன்படி, அந்நாட்டில் 2009ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள் எவருக்கும் சிகரெட், புகையிலை விற்கக் கூடாது. அதாவது 2008க்கும் பின் பிறந்தவர்கள் புகையிலை, சிகரெட் வாங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த குறைந்தபட்ச வயது சட்டம் ஆண்டுகள் கடந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும். எனவே, 50 ஆண்டுகள் கழிந்த பின்னர், சிகரெட் வாங்குவதற்கு குறைந்தபட்ச வயது 63 வயதாக இருக்கும்.

அதற்குள் ஒரு தலைமுறையினர் மத்தியில் புகைபிடிக்கும் பழக்கம் மறைந்தே போய்விடும் என்ற நம்பிக்கையில் அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளனர். இந்த புதிய சட்டத்தின் படி, அந்நாட்டில் சிகரெட், புகையிலை விற்கும் கடைகளின் எண்ணிக்கை 6000இல் இருந்து 600ஆக குறைக்கப்படும். மேலும், புகையிலையில் நிக்கோடின் அளவையும் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க: 18 முதல் 25 வயதினருக்கு ஆணுறை இலவசம் - பிரான்ஸ் அதிபர் அறிவிப்பு

ஒப்பீட்டு அளவில் பார்க்கையில் அந்நாட்டில் ஆண்டுதோறும் மக்களிடம் புகைப்பிடிக்கும் பழக்கம் கணிசமாக குறைந்து வருகிறது. நியூசிலாந்து நாட்டில் புகைப்பிடிக்கும் மக்களின் தொகை 9.4 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைந்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் கீழ் குறைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

First published:

Tags: New Zealand, Smoking