ஹோம் /நியூஸ் /உலகம் /

பிரசவ வலியோடு மருத்துவமனைக்கு சைக்கிளை ஒட்டி சென்று குழந்தையை பெற்றெடுத்த பெண் எம்பி!

பிரசவ வலியோடு மருத்துவமனைக்கு சைக்கிளை ஒட்டி சென்று குழந்தையை பெற்றெடுத்த பெண் எம்பி!

குழந்தையை பெற்றெடுத்த பெண் எம்பி

குழந்தையை பெற்றெடுத்த பெண் எம்பி

நியூசிலாந்து நாட்டின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் 41 வயதான ஜூலி அன்னே ஜென்டர் (Julie Anne Genter)தனது பிரசவத்திற்கு தானே சைக்கிளை ஒட்டி சென்று மருத்துவமனையில் அட்மிட் ஆன ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

நியூசிலாந்து நாட்டின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பிரசவத்திற்கு தானே சைக்கிளை ஒட்டி சென்று மருத்துவமனையில் அட்மிட் ஆன ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அவர் தனக்கு பிரசவ வலி எடுத்த பிறகே, அந்த வலியோடு சைக்கிளை தானே ஒட்டி சென்று மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என்பது தான். பிரசவ வலியில் இருந்த போது சைக்கிள் மூலம் மருத்துவமனைக்குச் சென்றதால் சர்வதேசளவில் பல ஊடகங்களின் தலைப்பு செய்தியாக மாறிப்போனார் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த அந்த பெண் எம்பி.

நியூசிலாந்து நாட்டின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் 41 வயதான ஜூலி அன்னே ஜென்டர் (Julie Anne Genter). இவர் மருத்துவமனைக்கு சைக்களில் சென்று பிரசவம் பார்த்து கொண்டுள்ள சம்பவம் தான் உலகளவில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. வீட்டிலிருந்து சிறிது தொலைவில் தான் மருத்துவமனை என்பதால் அவர் சைக்கிளை தேர்வு செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிரசவ வலியுடனே சைக்கிளை ஓட்டி கொண்டு சென்று ஹாஸ்பிடலில் அட்மிட் ஆன ஜூலி அன்னேவுக்கு, ஹாஸ்பிடலில் சேர்ந்த 1 மணி நேரத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலம் என்று பின்னர் மருத்துவமனை தகவல் தெரிவித்தது.

எம்பி ஜூலி ஆன் ஜென்டர் தனது முதல் குழந்தையான மகனின் பிரவத்தின் போதும் சைக்கிளிலேயே மருத்துவமனைக்கு சென்றுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. பிரசவத்திற்கான தனது சைக்கிள் சவாரி குறித்து ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாவில் ஜூலி அன்னே பின்வருமாறு ஷேர் செய்து இருக்கிறார். "பெரிய செய்தி! இன்று அதிகாலை (ஞாயிற்றுக்கிழமை) 3.04 மணியளவில் எங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினரை நாங்கள் வரவேற்றோம்.

ALSO READ |  ஏற்றம் உண்டானால், இறக்கமும் உண்டு ... எப்படி பயணிக்கிறது? கற்றுக்கொடுக்கும் குரங்கு - வைரல் வீடியோ

நான் உண்மையிலேயே பிரசவத்திற்காக சைக்கிள் ஓட்ட திட்டமிடவில்லை, ஆனால் மருத்துவமனைக்கு சைக்கிளிலேயே செல்லும்படியாகிவிட்டது. பிரசவத்திற்காக ஹாஸ்பிடலுக்கு புறப்பட அதிகாலை 2 மணிக்கு எழுந்தேன். அப்போது பிரசவ வலி லேசாக தான் இருந்தது மோசமாக இல்லை. எனவே சைக்கிளிலேயே ஹாஸ்பிடலுக்கு செல்ல முடிவு செய்து புறப்பட்டேன். வீட்டிலிருந்து ஹாஸ்பிடலுக்கு 3 - 4 நிமிடங்களில் சென்று விடலாம் மற்றும் பிரசவ வலியும் அதிகம் இல்லை என்பதால், சைக்கிளிலேயே செல்ல முடிவு செய்தேன்.




 




View this post on Instagram





 

A post shared by Julie Anne Genter (@julieannegenter)



சைக்கிள் ஒட்டி சென்ற போது கூட பெரிதாக பிரசவ வலி இல்லை. ஆனால் ஹாஸ்பிடலுக்கு சென்ற 10 நிமிடங்களில் எனக்கு பிரசவ வலி தீவிரமானது. ஆச்சரியப்படும் விதமாக இப்போது என்னிடம் அவளுடைய அப்பாவைப் போலவே ஒரு ஆரோக்கியமான, மகிழ்ச்சியான குழந்தை தூங்கி கொண்டிருக்கிறது. எனது இரண்டாவது பிரசவத்தை சிக்கலற்ற பிரசவமாக மாற்றிய சிறந்த மருத்துவ குழுவின் பங்களிப்பு மற்றும் கவனிப்பிற்கு நன்றி. நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்" என்று கூறி இருக்கிறார்.

ALSO READ |  ஹிந்தி பாடலுக்கு பாவனை செய்து அசத்திய பழங்குடியின இளைஞர் - வைரலாகும் வீடியோ

இவர் பிரசவத்திற்காக சைக்கிளில் மருத்துவமனைக்கு செல்லும் படங்கள் வைரலான பிறகு, அவரது குழந்தையின் சுவாரஸ்ய பிரசவ மற்றும் பிறப்புக்காக உலகம் முழுவதுமுள்ள எண்ணற்ற சோஷியல் மீடியா யூஸர்கள் வாழ்த்தினர். அதே நேரத்தில் பலர் அவரது மன வலிமையை கண்டு பிரமித்தும் கமெண்ட்ஸ் செய்தனர்.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: New Zealand