கொரோனா ஊரடங்கில் கஷ்டப்பட்டவருக்கு லாட்டரியில் ரூ.47 கோடி பரிசு - அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் மொமெண்ட்..!

பரிசு பெற்ற அந்நபர் இந்தப் பரிசு கிடைத்திருப்பதால் தங்கள் வாழ்க்கை நிலையை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

கொரோனா ஊரடங்கில் கஷ்டப்பட்டவருக்கு லாட்டரியில் ரூ.47 கோடி பரிசு - அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் மொமெண்ட்..!
ரூ.2000 நோட்டு
  • Share this:
கொரோனா ஊரடங்கில் வேலையிழந்த ஒருவருக்கு லாட்டரியில் ரூ.47 கோடி பரிசு கிடைத்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதனால் மக்கள் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரைச் சேர்ந்த ஒருவர் கொரோனா காரணமாக வேலையிழந்து தவித்து வந்துள்ளார். அவரது மனைவி அந்நாட்டு சுகாதாரத்துறையில் பணியாற்றி வந்துள்ளார். வேலையில் இருந்தபோது அந்நாட்டில் இணையதள லாட்டரி நடத்தும் நிறுவனத்தில் இருந்து லாட்டரி எண் ஒன்றைப் பெற்றுள்ளார்.


குலுக்கல் முடிவில் பரிசு தீர்மானிக்கப்படும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள குலுக்கல் முடிவில் அந்த நபருக்கு 10.3 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 47 கோடி ரூபாய் பரிசாகக் கிடைத்துள்ளது. இதனால் வேலையிழந்து சிரமப்பட்டு வந்த அந்நபரும், அவரது மனைவியும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அடையாளம் வெளியிடப்படாத அந்த தம்பதியினர் இந்தப் பரிசு கிடைத்திருப்பதால் தங்கள் வாழ்க்கை நிலையை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்றும் எப்போதும் போல் வாழ்ந்து இயன்றவரை பிறருக்கு உதவ விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். இச்செய்தி நியூசிலாந்தின் ஸ்டப் என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: May 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading