நியூசிலாந்து அருகே கெர்மாடெக் தீவுகளில் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதன்முறை ஏற்பட்ட நிலநடுக்கம் 7 .1 ஆகவும், இரண்டாவது நடுக்கம் 7 .4 ஆகவும் பதிவானது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. சில மணி நேரத்தில் மீண்டும் 8 .1 என்ற அளவிலான நிலநடுக்கம் பதிவானது.
இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தை அடுத்து இருமுறை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் விலக்கிக்கொள்ளப்பட்டது. கடற்கரை ஓரம் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். ஒரே நேரத்தில் ஏராளமானோர் உயரமான இடத்தை நோக்கி வாகனங்களில் சென்றதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வழக்கத்தை விட அதிகளவில் கடல் அலைகள் உயரமாக எழும்பின. நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. நிலைமையை தீவிரமாக கண்காணிப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.