கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததால் நியூசிலாந்தில் ஊடரங்கு ரத்து..

நியூசிலாந்து நாட்டில் 2வது முறையாக ஊரடங்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டிருப்பதால், பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததால் நியூசிலாந்தில் ஊடரங்கு ரத்து..
பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்
  • News18 Tamil
  • Last Updated: September 22, 2020, 7:59 AM IST
  • Share this:
கொரோனா பரவலைத் தடுக்க, பிற உலக நாடுகளைப் போல, நியூசிலாந்திலும் முழு ஊரடங்கு கொண்டு வரப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து, கடந்த மே மாதத்தில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. அடுத்த சில நாட்களில் மீண்டும் தொற்று அதிகரித்ததால், ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக, அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அறிவித்தார்.

மேலும் படிக்க...தொடர் உச்சத்தில் கொரோனா: தமிழகத்தில் இன்று மட்டும் 5,344 பேர் பாதிப்புதற்போது பாதிப்பு குறைந்துள்ளதால், ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை, அந்நாட்டு குடிமக்கள், சமூகவலைதளங்கள் மூலம் கொண்டாடி வருகின்றனர்.


இருப்பினும், ஆக்லாந்து உள்ளிட்ட நகரங்களில் ஒரு சில பாதிப்புகள் இருப்பதால், அங்கு மட்டும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
First published: September 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading