• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • நியூசிலாந்தையும் விட்டுவைக்காத டெல்டா வகை கொரோனா.. தினசரி பாதிப்பு புதிய உச்சம்..

நியூசிலாந்தையும் விட்டுவைக்காத டெல்டா வகை கொரோனா.. தினசரி பாதிப்பு புதிய உச்சம்..

Newzealand

Newzealand

நியூசிலாந்தில் கொரோனா பரவல் கடந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தே இதுவரை அங்கு பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ தாண்டாமல் தான் இருந்து வந்தது.

  • Share this:
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியதற்காக சர்வதேச அளவில் பாராட்டு பெற்ற நியூசிலாந்து நாட்டையும் டெல்டா வகை கொரோனா பாடாய்ப்படுத்தி வருகிறது. அங்கு தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது.

சீனாவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், கடந்த ஆண்டு அங்கிருந்து பரவி உலக நாடுகள் முழுவதையும் பாடாய்ப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக கடுமையான பாதிப்பையும், உயிரிழப்பையும் உலக நாடுகள் சந்தித்தன. இது தவிர கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தினால் பொருளாதாரமும் ஸ்தம்பித்தது. இதையடுத்து போர்க்கால அடிப்படையில் கொரொனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் பல நாடுகளும் ஈடுபட்டன.

இதன் பலனாக தற்போது பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் கூட கொரோனா பரவலை பெரிய அளவில் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதற்கு சான்றாக அலை அலையாக கொரோனா பரவி வந்தது. இதற்கு காரணமாக இருந்தது உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ். பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட போதிலும் டெல்டா என்ற வகை கொரோனாவே அதிக பாதிப்புக்குரியதாக விளங்கி வருகிறது.

Also read:   தனியார் பள்ளியின் கழிவறையில் மறைத்து பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராக்கள்.. பெண்களை வீடியோ எடுத்தது அம்பலம்..

தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவந்த போதிலும் இந்த உருமாறிய கொரோனா பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவலை திறம்பட கையாண்ட நியூசிலாந்தும் தற்போது டெல்டா வகை கொரோனாவுடன் போராட முடியாமல் தவித்து வருகிறது.

நியூசிலாந்தில் கொரோனா பரவல் கடந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தே இதுவரை அங்கு பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ தாண்டாமல் தான் இருந்து வந்தது. ஆனால் நியூசிலாந்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து நிலைமை தலைகீழாக மாறியது. தொடர்ந்து தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் செப்டம்பர் மாதம் பாதிப்பு எண்ணிக்கை 100ஐ கடந்தது. நேற்றைய நிலவரப்படி அங்கு தினசரி எண்ணிக்கை 100ஐ கடந்திருக்கிறது. இதுவே நியூசிலாந்து வரலாற்றில் பதிவான அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும்.

Also read:  இந்திய அணி ஃபைனலுக்கு முன்னேற வேண்டும், ஆனால்…. : சோயிப் அக்தர் வைத்த ட்விஸ்ட்

நேற்று மட்டும் அங்கு 207 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2500ஐ கடந்துள்ளது. நியூசிலாந்தில் தற்போது நிலை கவலைக்குரியதாக இருந்தாலும், தற்போதைய நிலையிலும் கூட கொரோனாவை திறம்பட கையாண்ட நாடாக நியூசிலாந்து திகழ்கிறது. அங்கு இதுவரை மொத்தமாகவே பாதிப்பு எண்ணிக்கை 7,000ஐ தாண்டவில்லை, அதே போல அங்கு வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 31ஆக இருக்கிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: