நியூசிலந்தில் கரை ஒதுங்கிய 51 திமிங்கலங்கள் உயிரிழப்பு

80 முதல் 90 வரையிலான பைலட் வகை திமிங்கிலங்கள் கரை ஒதுங்கிய நிலையில், 40 திமிங்கலங்கள் தாமாகவே மிதந்து கடலுக்குள் சென்றன.

Web Desk | news18
Updated: December 1, 2018, 1:24 PM IST
நியூசிலந்தில் கரை ஒதுங்கிய 51 திமிங்கலங்கள் உயிரிழப்பு
புதைக்கப்படும் பைலட் வகை திமிங்கலங்கள்
Web Desk | news18
Updated: December 1, 2018, 1:24 PM IST
நியூசிலாந்தின் ஹன்சன் வளைகுடாப்பகுதியில் கரை ஒதுங்கிய 50-க்கும் மேற்பட்ட பைலட் வகை திமிங்கலங்கள் உயிரிழந்தன.

நியூசிலாந்தின் ஹன்சன் வளைகுடாப் பகுதியில் உள்ள சத்தாம் தீவில், 80 முதல் 90 வரையிலான பைலட் வகை திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியது. அவற்றில் 40 திமிங்கலங்கள் தாமாகவே மிதந்து கடலுக்குள் சென்றன. மீதமுள்ள 51 திமிங்கலங்கள் உயிரிழந்தன.

இறந்து கரை ஒதுங்கிய பைலட் வகை திமிங்கலங்கள்


திமிங்கலங்களின் உயிரிழப்பிற்கு உண்மையான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை என்றும் மோசமான வானிலை பாதையில் ஏற்படும் குழப்பம் உள்ளிட்ட காரணிகளால் இந்த விபரீதம்  நடந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் நோய் ஏதேனும் தாக்கியிருக்கலாம் என்றும் நியூசிலாந்து இயற்கை வள பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹன்சன் வளகுடா பகுதியில் கரை ஒதுங்கியுள்ள 1000-கணக்கான திமிங்கலங்கள்


இறந்த திமிங்கலங்கள் அங்கேயே குழி தோண்டி புதைக்கப்பட்டன.
Loading...
Also see...ஸ்டெதெஸ்கோப் பிடித்த கையில் தோசை கரண்டி: மாணவிக்கு நேர்ந்த அவலம்

First published: December 1, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...