இரட்டை கோபுர தாக்குதலில் மூடப்பட்ட சுரங்க பாதை மீண்டும் திறப்பு

news18
Updated: September 10, 2018, 2:10 PM IST
இரட்டை கோபுர தாக்குதலில் மூடப்பட்ட சுரங்க பாதை மீண்டும் திறப்பு
சப்வேயில் பயணிக்க வரிசையில் நிற்கும் பயணிகள்.
news18
Updated: September 10, 2018, 2:10 PM IST

அல் – கொய்தா தீவிரவாத தாக்குதலில் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது. இந்த தாக்குதலில் 3,000 பேர் உயிரிழந்தனர். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுக்க இதையே காரணமாகவும் உலக அரங்கில் அறிவித்தது.


ட்வின் டவர் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் கார்ட்லேண்ட் சாலையில் உள்ள சுரங்கபாதை சேதம் காரணமாக மூடப்பட்டது. 17 ஆண்டுகளுக்குப் பின் சனிக்கிழமை திறக்கப்பட்ட இந்த சப் வேயில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த சப்வேயில் உலக வர்த்தக மையத்திற்கான (WTO) நிறுத்தம் உள்ளது. இந்த சப் வேக்கு மேல் ட்வின் டவர்ஸ் அமைந்திருந்தது. ரயில் இந்த நிறுத்தத்தை கடக்கும்போது மக்கள் உற்சாகமாக கைதட்டியும் தங்களின் போனை உயர்த்திக் காட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
இந்நிலையில் இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்தின் 17-வது நினைவுநாள் நாளை அமெரிக்காவில் அனுசரிக்கப்படுகிறது.
First published: September 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...