25 ஆண்டுகளுக்கு பின் துப்பாக்கிச்சத்தம், ரத்தம் இல்லாமல் அமைதியாக கடந்துபோன வீக் எண்ட்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 25 ஆண்டுகளுக்கு பின் கடந்த வார இறுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவமோ, கொலைக்குற்றங்களோ நடக்கவில்லை.

25 ஆண்டுகளுக்கு பின் துப்பாக்கிச்சத்தம், ரத்தம் இல்லாமல் அமைதியாக கடந்துபோன வீக் எண்ட்!
நியூயார்க் நகரம் (கோப்பு படம்)
  • News18
  • Last Updated: October 16, 2018, 6:03 PM IST
  • Share this:
துப்பாக்கிச்சூட்டுக்கு பெயர் போன அமெரிக்காவில் உள்ள மிக முக்கியமான நகரமான நியூயார்க்கில் கடந்த வார இறுதியில் எந்த விதமான குற்றங்களும் நடக்கவில்லை. 25 ஆண்டுகளுக்கு பின் இதுபோன்று நடந்திருப்பது ஆச்சரியப்பட வைத்துள்ளது.

வானுயர்ந்த கட்டடங்கள், மேம்பட்ட கலாச்சாரம், வலிமையான ராணுவம் என அமெரிக்கா மீது உலகம் வைக்கும் பார்வை எப்பொதுமே உயரமானதுதான். இருப்பினும், அங்கு அடிக்கடி நடைபெறும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அமெரிக்கா மீதான பார்வையில் பயத்தை கொடுக்கிறது. நாகரீகத்தில் மேம்பட்டு இருந்தாலும் எதற்காக இப்படி சிலர் துப்பாக்கிகளை கொண்டு அப்பாவிகளை கொன்று வருகின்றனர்? என்ற கேள்வி எழாமல் இல்லை.

அமெரிக்காவில் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 52,385 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 13,149 பேர் தங்களது உயிர்களை இழந்துள்ளனர். இதில், 307 சம்பவங்கள் பெரியது என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.


தீவிரவாதத்தை விட அமெரிக்காவுக்கு பெரிய தலைவலியை கொடுப்பது உள்நாட்டில் மக்களோடு மக்களாக கலந்திருக்கும் துப்பாக்கிகள்தான். 2014-ம் ஆண்டுக்கு பின்னர் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 103 பேர் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களை கணக்கிட்டால் இது வெறும் 1 சதவிகிதம் தான்.

டெக்ஸாஸ் சர்ச்சில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 18 மாத குழந்தை, கர்பினி தாயை இழந்த குடும்பத்தினர் அழுத காட்சி


இந்த ஆண்டில் இதுவரை 147 பேர் பலியாகியுள்ளனர். புரூக்ளின் மற்றும் ப்ரோன்க்ஸ் நகரில்தான் அதிகளவில் நடந்துள்ளது. நியூயார்க், டெக்ஸாஸ் உள்ளிட்ட நகரங்களில் வார இறுதி கொண்டாட்டங்கள் மது, மாதுவுடன், துப்பாக்கிச்சூடு சம்பவத்தையும் சேர்த்தே முடிவடையும். இந்நிலையில், 25 ஆண்டுகளுக்கு பின்னர் நியூயார்க் நகரம் ஒரு சாதனையை படைத்துள்ளது.நியூயார்க் நகரத்தில் கடந்த வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் எந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களோ, கொலைக்குற்றமோ நடக்கவில்லை என நகர போலீஸ் தலைவர் ஜேம்ஸ் ஓ நெயில் கூறியுள்ளார். இது நியூயார்க்கில் உள்ள அனைவரும் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டிய ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நியூயார்க் நகர போலீஸ் தலைவர் ஜேம்ஸ் ஓ நெயில்


போலீசாரிடம் உள்ள தரவுகளின் படி கடந்த 1993-க்கு பிறகு துப்பாக்கிச்சூடு இல்லாத வார இறுதி கடந்த வாரம் நடந்துள்ளது. எனினும், அமெரிக்காவின் புரூக்ளின் மற்றும் ப்ரோன்க்ஸ் நகரத்தில் கடந்த வாரம் பல துப்பாக்கிச்சூடு நடந்துள்ள சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


First published: October 16, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading