Home /News /international /

அமெரிக்காவில் ஒமிக்ரான் வேரியன்ட்டால் பாதிக்கப்பட்ட மான் - நிபுணர்கள் கவலை!

அமெரிக்காவில் ஒமிக்ரான் வேரியன்ட்டால் பாதிக்கப்பட்ட மான் - நிபுணர்கள் கவலை!

மான்

மான்

மான்களுக்கு மனிதர்களிடமிருந்து வைரஸ் பரவி பின் அந்த தொற்று மற்ற மான்களுக்கு பரவுகின்றன என்று ஆராய்ச்சி கூறுகிறது.

நியூயார்க்கின் ஸ்டேட்டன் (staten) தீவில் உள்ள வெள்ளை வால் மான் (white-tailed deer) ஒன்றுக்கு அதிவேகத்தில் பரவ கூடிய கொரோனா வைரஸின் முக்கிய வேரியன்டான ஒமைக்ரான் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காட்டு விலங்குகளில் முதல் முறையாக இந்த வேரியன்ட் பாதிப்பு பதிவாகி இருப்பது நிபுணர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்த கண்டுபிடிப்புகள் வெள்ளை வால் மான்கள் வைரஸால் எளிதில் பாதிக்கப்படும் என்பதற்கான ஆதாரங்களுக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. அமெரிக்காவில் மில்லியன் கணக்கான வெள்ளை வால் மான்கள் இருக்கும் நிலையில், ஒமைக்ரான் வேரியன்ட்டை மனிதர்களுக்கு பரப்ப கூடிய உயிரினமாக அவை மாற கூடும் என்ற கவலையும் எழுந்துள்ளது.

இதனிடையே ஆர்கன்சாஸ், இல்லினாய்ஸ், கன்சாஸ், மைனே, மாசசூசெட்ஸ், மினசோட்டா, நியூ ஜெர்சி, நியூயார்க், வட கரோலினா, ஓக்லஹோமா, பென்சில்வேனியா, டென்னசி மற்றும் வர்ஜீனியா ஆகிய 13 மாகாணங்களில் மான்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதாக அமெரிக்க விவசாய துறை உறுதிப்படுத்தியுள்ளது. அந்நாட்டின் விலங்கு மற்றும் தாவர சுகாதார ஆய்வு சேவையின் செய்தித் தொடர்பாளர் லிண்ட்சே கோல் பேசுகையில் அந்த விலங்குகள் வைரஸின் முந்தைய வேரியன்ட்களால் பாதிக்கப்பட்டன என்று குறிப்பிட்டார்.

மான்களுக்கு மனிதர்களிடமிருந்து வைரஸ் பரவி பின் அந்த தொற்று மற்ற மான்களுக்கு பரவுகின்றன என்று ஆராய்ச்சி கூறுகிறது. மேலும் விலங்குகள் அதை மீண்டும் மக்களுக்கு பரப்புகின்றன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் நீண்ட காலத்திற்கு மான்களுக்கு தொடர்ந்து வைரஸ் பரவுவது கொரோனா வைரஸ் உருமாறுவதற்கு அதிக வாய்ப்பை கொடுக்கும். இது ஒருகட்டத்தில் மனிதர்கள் அல்லது பிற விலங்கு இனங்களுக்குள் பரவக்கூடிய புதிய வைரஸ் வேரியன்ட்களுக்கு வழிவகுக்கும். மான்களில் உள்ள வைரஸின் சுழற்சி அதை மாற்றியமைத்து பரிணாம வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குவதே இதற்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நியூயார்க்கின் ஸ்டேட்டன் தீவில் எடுக்கப்பட்ட 131 மான்களின் ரத்தம் மற்றும் சில நாசி ஸ்வாப் சாம்பிள்கள் கிட்டத்தட்ட 15% வைரஸ் ஆன்டிபாடிகள் இருப்பதை வெளிப்படுத்தின. இந்த கண்டுபிடிப்பு விலங்குகளுக்கு முந்தைய கொரோனா வைரஸ் தொற்றுகள் இருப்பதாகவும், புதிய வேரியன்ட்கள் காரணமாக மீண்டும் மீண்டும் அவற்றுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தலைமையிலான ஆராய்ச்சி குழு தகவல் தெரிவித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட விலங்குகளில் நீண்ட நாட்கள் காணப்படும் வைரஸின் சுழற்சி எப்போதும் மனிதர்களிடம் மீண்டும் திரும்புவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. மேலும் மிக முக்கியமாக குறிப்பிட்ட வைரஸ் புதிய வேரியன்ட்களாக உருவாக அதிக வாய்ப்புகளை வழங்குகிறது என்றும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Also read... தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா, மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த சீன அரசு

இதன் காரணமாக வைரஸ் முற்றிலும் மாற்றமடைந்தால், அது தற்போதைய தடுப்பூசியின் பாதுகாப்பிலிருந்து தப்பிக்கும் குணம் கொண்டதாக மாறி விடும். எனவே நாம் மீண்டும் வெறும் தடுப்பூசியை மாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்றும் அந்நாட்டு நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். விலங்குகள் மனிதர்களுக்கு வைரஸை பரப்புகின்றன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், பெரும்பாலான கொரோனா வைரஸ் தொற்றுகள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த உயிரினங்களில் பதிவாகி இருப்பதாக அமெரிக்க வேளாண்மைத் துறை கூறி இருக்கிறது. மான்களில் ஒமைக்ரான் வேரியன்ட் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள நிபுணர்கள், தொற்றுநோய் இன்னும் முடிவடையவில்லை என்பதற்கான நினைவூட்டலாக இருப்பதாக கூறியுள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: America, Omicron

அடுத்த செய்தி