அமெரிக்காவின் நியூயார்க்கில் உலகை அச்சுறுத்தும் கோவிட்-19, அல்லது கொரோனா உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதால் அச்சம் பரவி வருகிறது.
இதுவரை 5 ஓமைக்ரான் கேஸ்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல் தெரிவித்துள்ளார். ஓமைக்ரான் அமெரிக்காவில் முதலில் கலிபோர்னியாவில் ஒருவருக்கு வந்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது, இப்போது நியூயார்க்கில் 5 பேருக்குப் பரவியுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் ஓமைக்ரான் ஸ்ட்ரெய்ன் தொற்றியுள்ளோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
கவர்னர் கேத்தி ஹோச்சுல் கூறும்போது, “நியூயார்க் மாகாணத்தில் 5 பேருக்கு ஓமைக்ரான் தொற்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. நான் தெளிவாகக் கூறுகிறேன். அபாய மணி ஒலிக்க வேண்டிய அவசியமில்லை. இது பரவாமல் தடுக்கும் சாதனங்கள் எங்களிடத்தில் உள்ளன” என்று உறுதியளித்துள்ளார்.
அமெரிக்காவின் மினசோட்டா, கொலராடோ ஆகிய மாகாணங்களிலும் பரவியுள்ளது. கலிபோர்னியாவில் முதலில் கண்டுப்பிடிக்கப்பட்ட நபர் தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் செய்து திரும்பியவர்.
B.1.1.529 என்ற இந்த வைரஸ்தான் ஓமைக்ரான் என்று அழைக்கப்படுகிறது. இது தென் ஆப்பிரிக்காவில் நவம்பர் 24ம் தேதி கண்டுப்பிடிக்கப்பட்டது. இது கவலையளிக்கக் கூடிய வேரியண்ட் என்று உலகச் சுகாதார அமைப்பு வகைப்படுத்தியது.
Also Read: ஒமைக்ரான் உலகளவில் மிக அதிக ஆபத்தை ஏற்படுத்தும் - WHO எச்சரிக்கை
Also Read: ஒமைக்கரான் அச்சுறுத்தல் : கர்நாடகாவில் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.