முகப்பு /செய்தி /உலகம் / கொரோனா நோயாளிகளுக்கு இலவச வைரஸ் தடுப்பு மாத்திரைகள்- புது வழியில் களமிறங்கும் நியூயார்க்

கொரோனா நோயாளிகளுக்கு இலவச வைரஸ் தடுப்பு மாத்திரைகள்- புது வழியில் களமிறங்கும் நியூயார்க்

மாதிரிப் படம்.

மாதிரிப் படம்.

கொரோனா பாசிட்டிவ் நோயாளிகள் மற்றும் கோவிட் -19 வைரஸினால் அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு நியூயார்க் நகரம் இலவச வைரஸ் தடுப்பு மாத்திரைகளை வீட்டிற்கு சென்று நேரடியாக வழங்கும் என்று மேயர் எரிக் ஆடம்ஸ் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கொரோனா பாசிட்டிவ் நோயாளிகள் மற்றும் கோவிட் -19 வைரஸினால் அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு நியூயார்க் நகரம் இலவச வைரஸ் தடுப்பு மாத்திரைகளை வீட்டிற்கு சென்று நேரடியாக வழங்கும் என்று மேயர் எரிக் ஆடம்ஸ் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வாய்வழி வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் ஃபைசர் இங்க் ஆல்டோ பார்மசியுடன் இணைந்து விநியோகிக்கப்படும். பைசர் நிறுவனத்தின் paxlovid, மெர்க் நிறுவனத்தின் molnupiravir ஆகிய மருந்துகள் போதிய அளவில் கிடைக்கின்றன, இவை வீடுகளுக்கு நேரடியாக சேர்ப்பிக்கப்படும் என்கிறது நியூயார்க் சிட்டி நிர்வாகம்.

மீண்டும் நியூயார்க் நகரத்தை அமெரிக்காவின் கோவிட்-19 மையமாக மாற்றிய ஓமைக்ரான் (Omicron)எழுச்சி கணிசமாகக் குறைந்துள்ளது. அதாவது, 28 நாட்கள் சராசரியின் படி தினசரி 20,500 பேர் தொற்றால் பாதிக்கப்படும் நிலை மாறி, கடந்த வார தினசரி சராசிரி தொற்று விகிதம் 5,000த்திற்கும் சற்று கூடுதல் என்ற அளவில் குறைந்துள்ளது. 28 நாள் சராசரியான 659 உடன் ஒப்பிடும்போது தினசரி மருத்துவமனையில் சேர்க்கப்படுவது சராசரியாக 267 ஆகக் குறைந்துள்ளது.

நியூயார்க்கைச் சுற்றி கொரோனா எழுச்சி சற்றே வீழ்ச்சியடைந்ததால், நகரம் இப்போது மாநிலத்தின் மிகக் குறைந்த நோய்த்தொற்று விகிதங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது என்று மேயர் ஆடம்ஸ் தெரிவித்தார்.

கோவிட்-19 தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் பரிந்துரைக்கப்படும் நபர்களுக்கு பாக்ஸ்லோவிட் வாய்வழி மாத்திரை தடுப்பூசிக்கு மாற்றாக பரிந்துரைக்கப்படுவதில்லை.

SARS-CoV-2 புரதத்தைத் தடுக்கும் Paxlovid-ல் nirmatrelvir என்ற பொருள் உள்ளது, இது வைரஸ் தன்னை நகல் எடுக்கும் செயலைத் தடுக்கிறது. ritonavir என்ற மற்றொரு பொருள் நிர்மட்ரெல்விர் என்ற பொருள் சிதைவதை மெதுவாக செய்யுமாறு பணிக்கும் இதன் மூலம் நிர்மட்ரெல்விர் அதிக நேரம் உடலில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்படுகிறது.

பாக்ஸ்லோவிட் மூன்று மாத்திரைகளாக (நிர்மத்ரெல்விரின் இரண்டு மாத்திரைகள் மற்றும் ரிடோனாவிரின் ஒரு மாத்திரை) ஐந்து நாட்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை, மொத்தம் 30 மாத்திரைகளாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மேல் பயன்படுத்த Paxlovid அங்கீகரிக்கப்படவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: CoronaVirus, Covid-19, NewYork