Home /News /international /

அரசு பணியாளர்களுக்கு வாரத்தில் நான்கரை நாட்கள் மட்டுமே வேலை... வருகிறது புதிய சட்டம்

அரசு பணியாளர்களுக்கு வாரத்தில் நான்கரை நாட்கள் மட்டுமே வேலை... வருகிறது புதிய சட்டம்

பொருளாதார ரீதியில் இந்த புதிய வேலைநாள் வாரம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், பணியாளர்களின் வேலை மற்றும் வாழ்க்கையை சமநிலைப் படுத்தி அவர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் அமையும் என்றும் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

மேலும் படிக்கவும் ...
    அரசு பணியாளர்களுக்கு வாரத்தில் நான்கரை நாட்கள் மட்டுமே வேலை, மற்ற இரண்டரை நாட்கள் விடுமுறை என்ற புதிய சட்டத்தை ஐக்கிய அரபு அமீரகம் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய வேலை முறை, புத்தாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    உலகின் பெரும்பாலான நாடுகளில் வாரம் 2 நாட்கள் அரசுப் பணியாளர்களுக்கு விடுமுறை வழங்கும் நடைமுறை இருந்து வருகிறது. இந்நிலையில் உலகின் முதல் நாடாக 5 நாட்களுக்கும் குறைவான வேலை நாட்களை, ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.

    புதிய சட்டத்தின்படி, ஐக்கிய அரபு அமீரக அரசுப் பணியாளர்கள், திங்கள் முதல் வியாழன் வரை முழு வேலை நாட்களாக இருக்கும். அன்றைய தினங்களில் வேலை காலை 7.30-க்கு தொடங்கி மாலை 3.30-க்கு முடிந்து விடும்.

    வெள்ளிக் கிழமை அரை நாள் மட்டுமே பணி செய்ய வேண்டும். அன்றைய தினம் காலை 7.30-க்கு தொடங்கும் அலுவலக பணிகள், மதியம் 12 மணியுடன் முடிந்து விடும். இதன்பின்னர், வெள்ளிக்கிழமை மதியம், சனி, ஞாயிறு என மொத்தம் இரண்டரை நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் மிக அத்தியாவசிய வேலைகள் இருந்தால், அவற்றை வீட்டில் இருந்தே செய்து கொள்ளலாம் என்று பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உலகிலேயே, 5 நாள் பணி வாரத்தை விட குறைவான தேசிய வேலை வாரத்தை அறிமுகப்படுத்திய முதல் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் மாறியுள்ளது.

    Also Read : இங்கிலாந்தில் 3,000 கிமீக்கு மேல் இலவசமாக பயணம் செய்த மூதாட்டி!

    பொருளாதார ரீதியில் இந்த புதிய வேலைநாள் வாரம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், பணியாளர்களின் வேலை மற்றும் வாழ்க்கையை சமநிலைப் படுத்தி அவர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் அமையும் என்றும் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

    ஐக்கிய அரபு அமீரகத்துடன் வர்த்தக தொடர்பு கொண்டுள்ள பெரும்பாலான நாடுகளில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை நாட்களாக உள்ளன. வெள்ளிக்கிழமை மாலைகளில் குறைந்த அளவு பொருளாதார பணப் பரிமாற்றங்கள், வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகைக்காக ஊழியர்கள் தயாராகுவது உள்ளிட்டவை, விடுமுறை நாட்கள் மாற்றத்துக்கு முக்கிய காரணம்.

    Also Read : ரஷ்ய படையெடுப்பை ஒரே ட்விட்டில் கலாய்த்த உக்ரைன்

    Published by:Musthak
    First published:

    Tags: UAE

    அடுத்த செய்தி