Home /News /international /

இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா வைரஸ்... இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்துமா?

இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா வைரஸ்... இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்துமா?

சில உலக நாடுகள் புதிய வைரஸ் பாதிப்பை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளன. குறிப்பாக பிரிட்டன் சிங்கப்பூர் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன.

    உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு பி.1.1.529 என்று பெயர் வைத்துள்ள விஞ்ஞானிகள், இந்த வைரஸ் முன்பு தாக்குதலில் ஈடுபட்டவைகளை விட அபாயகரமானவை என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.

    இந்த வகை வைரஸில் ஸ்பைக் புரதம் இடம்பெற்றிருக்கும். இது, ஏற்கனவே செலுத்தப்பட்ட தடுப்பூசிகளை செயலிழக்கச் செய்யும் ஆற்றல் கொண்டதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். முதலில் தென் ஆப்பிரிக்காவில் சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ், போட்ஸ்வானா உள்ளிட்ட பக்கத்து நாடுகளுக்கும் பரவியுள்ளது.

    இதே வகை வைரசால் பாதிக்கப்பட்ட 2 பேர் ஹாங்காங்கில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களிடமிருந்து வைரஸ் மாதிரிகளை பெற்றுக் கொண்ட விஞ்ஞானிகள் அது ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பி.1.1.529 என்ற புதிய வைரஸ் காற்றின் மூலம் பரவக் கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள்.

    இஸ்ரேல் நாட்டிலும் புதிய வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர், புதிய வைரசால் பாதிக்கப்பட்ட 2 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

    இந்த பிரச்சனையை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ள மத்திய அரசு தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்துள்ளது. சில உலக நாடுகள் புதிய வைரஸ் பாதிப்பை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளன. குறிப்பாக பிரிட்டன் சிங்கப்பூர் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன.

    புதிய வைரஸ் பாதிப்பு தொடக்க நிலையில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. அதன், தொழில்நுட்பத் துறை தலைமை அதிகாரி டாக்டர் மரியா வான்கோ கூறுகையில் புதிய வகை பி.1.1.529 வைரஸ் பாதிப்பு தொடர்பாக நாங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது விரைவில் தெரியவரும். கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை இந்த புதிய வைரஸ் உணர்த்துகிறது என்று கூறியுள்ளார்.

    பி.1.1.529 வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் இதுவரை புதுவகை கொரோனா தொற்று பாதிப்பில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Corona

    அடுத்த செய்தி