ஹோம் /நியூஸ் /உலகம் /

இங்கிலாந்து பிரதமர் ரிஷியை சொந்தம் கொண்டாடும் இந்தியா - பாகிஸ்தான்! காரணம் என்ன ?

இங்கிலாந்து பிரதமர் ரிஷியை சொந்தம் கொண்டாடும் இந்தியா - பாகிஸ்தான்! காரணம் என்ன ?

ரிஷி சுனக்

ரிஷி சுனக்

ரிஷியின் தந்தை யஷ்வீர் சுனக் 1949 இல் நைரோபியில் பிறந்தார். யஷ்வீர் 1966 இல் லிவர்பூலுக்கு குடிபெயர்ந்து லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |

பிரிட்டனின் முதல் வெள்ளையர் அல்லாத பிரதமராகியுள்ள ரிஷி சுனக் தங்கள் நாட்டை சேர்ந்தவர் என்று இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு பெருமையைப் பகிர்ந்து கொள்வதற்கு மல்லுகட்டி வருகிறது.

தீபாவளியன்று ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட 42 வயதான ரிஷி சுனக் பிரிட்டனின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். ரிஷியின் தாத்தா பாட்டி  ஆகியோர் பிரிட்டிஷ் ஆட்சியின்போது இந்தியாவில் இருந்து ஆப்பிரிக்க நாட்டிற்கு சென்று, பின் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தவர்கள்.

அவர்கள் இங்கிருந்து செல்லும் போது அது பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால், அவர்களின் பிறந்த இடம் தற்போது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ரன்வாலா என்பதால் தான் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் ரிஷி சுனக் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் இந்து-பஞ்சாபி பெற்றோருக்கு பிறந்தார். அவர்களது பெற்றோரும் இங்கிலாந்தில் பிறந்தவர்கள் தான்.

குஜ்ரன்வாலா

அவரது தாத்தா, பாட்டி மட்டும் தான் பிரிட்டிஷ் இந்தியாவை சேர்ந்தவர்கள். மல்யுத்த கலாச்சாரத்திற்கு பெயர் பெற்ற குஜ்ரன்வாலா, பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் மாகாண தலைநகரான லாகூரில் இருந்து சுமார் 1.5 மணிநேரத்தில் உள்ளது. பிரிவினைக்கு முன், ரிஷியின் தாத்தா பாட்டி குஜ்ரன்வாலாவில் வாழ்ந்தபோது, ​​நகரம் குறைந்தது ஏழு வாயில்களால் சூழப்பட்ட ஒரு இடமாக இருந்தது. இப்போது குஜ்ரன்வாலா நகரமாக அறியப்படுகிறது.

இங்கிலாந்து செல்ல டிக்கெட்டுக்கு கூட பணம் இல்லாமல் தவித்த பாட்டி.. நாட்டையே ஆள போகும் பேரன்... ரிஷி சுனக் பற்றி சுவாரஸ்ய தகவல்

1930 களின் முற்பகுதியில் வகுப்புவாத கலவரங்கள் மற்றும் இரத்தக்களரி காரணமாக குஜ்ரன்வாலா பகுதி மக்கள் எல்லையின் இருபுறமும் தப்பி ஓட வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். கலவரத்தின் போது , ரிஷியின் தந்தைவழி தாத்தா ராம்தாஸ் சுனக், 1935 இல் குஜ்ரன்வாலாவை விட்டு வெளியேறி நைரோபியில் எழுத்தராக பணியாற்றினார்.

அவரது மனைவி, சுஹாக் ராணி சுனக், 1937 இல் கென்யாவுக்குச் செல்வதற்கு முன், குஜ்ரன்வாலாவிலிருந்து தனது மாமியாருடன் டெல்லிக்கு குடிபெயர்ந்தார். சுஹாக் ராணி மற்றும் ராம்தாஸுக்கு ஆறு குழந்தைகள், மூன்று மகன்கள் மற்றும் மூன்று மகள்கள்.

ரிஷியின் தந்தை யஷ்வீர் சுனக் 1949 இல் நைரோபியில் பிறந்தார். யஷ்வீர் 1966 இல் லிவர்பூலுக்கு குடிபெயர்ந்து லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றார். 1977 இல், யஷ்வீர் லீசெஸ்டரில் உஷாவை மணந்தார். ரிஷி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1980 இல் சவுத்தாம்ப்டனில் பிறந்தார்.

உரிமைகோரல்

சுனக்கைப் பற்றி பாகிஸ்தானில் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படவில்லை என்றாலும், சமூக ஊடகங்களில் சிலர் அவர் மீது உரிமை கோருமாறு அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர். இந்தியர்கள் அவரை இந்திய வம்சாவளி என்று உரிமை கோருகின்றனர்.

ரிஷியின் மனைவி இந்தியாவின் பில்கேட்ஸ் என்று அழைக்கப்படும் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தி. இதனால் இந்தியர்களின் உரிமை கோரல் என்பது கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: India and Pakistan, Rishi Sunak