ஹோம் /நியூஸ் /உலகம் /

3000 ஆண்டு பழமையான மம்மி உடலுக்கு உருவம்! தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அராய்ச்சியாளர்கள் முயற்சி

3000 ஆண்டு பழமையான மம்மி உடலுக்கு உருவம்! தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அராய்ச்சியாளர்கள் முயற்சி

மற்ற நாடுகளை காட்டிலும் எகிப்தில் வாழ்ந்த மனிதர்களின் நாகரீகம் மிகவும் பழமையானது. ஏராளமான மர்மங்கள் எகிப்தில் இன்றளவும் மறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற நாடுகளை காட்டிலும் எகிப்தில் வாழ்ந்த மனிதர்களின் நாகரீகம் மிகவும் பழமையானது. ஏராளமான மர்மங்கள் எகிப்தில் இன்றளவும் மறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற நாடுகளை காட்டிலும் எகிப்தில் வாழ்ந்த மனிதர்களின் நாகரீகம் மிகவும் பழமையானது. ஏராளமான மர்மங்கள் எகிப்தில் இன்றளவும் மறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

 • 2 minute read
 • Last Updated :

  பழங்கால மனிதர்களை பற்றிய எல்லா தகவல்களும் நமக்கு எப்போதும் சுவாரஸ்யத்தை தந்து கொண்டிருக்கும். அதிலும் குறிப்பாக மம்மி போன்ற பழங்கால எகிப்து மனிதர்களை பற்றிய செய்திகள் அவ்வப்போது பல இரகசியங்களை வெளிப்படுத்தி வருகிறது. எகிப்தில் வாழ்த்த மனிதர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, கலாச்சாரம், அறிவியல் சார்ந்த படைப்புகள் இப்படி பலவற்றை பற்றி தெரிந்து கொள்ள அவர்களின் உடல்கள் மிகவும் அவசியமாகும்.

  இதற்காகவே எகிப்தில் பல்வேறு இடங்களில் பல ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மற்ற நாடுகளை காட்டிலும் எகிப்தில் வாழ்ந்த மனிதர்களின் நாகரீகம் மிகவும் பழமையானது. ஏராளமான மர்மங்கள் எகிப்தில் இன்றளவும் மறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அங்கு கண்டெடுக்கப்டும் உடல்கள் பல அடக்கு துணிகளை கொண்டு மூடப்பட்டு இருக்கும். இவற்றை 'மம்மி' என்று அழைக்கின்றனர்.

  மம்மிகளின் மீதுள்ள துணிகளை பிரித்து பார்க்காமலே தற்போது உள்ள நவீன தொழில்நுட்பத்தை கொண்டு அவற்றை ஸ்கேன் செய்வதன் மூலம் அதன் வடிவ அமைப்பிற்கு உருவம் கொடுத்துள்ளனர். முதல் முறையாக இது போன்று டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கொண்டு மம்மி உருவத்தை கொண்டு வந்துள்ளனர். இது சாதாரண எகிப்து மக்களின் உடலை கொண்டு ஆய்வு செய்யவில்லை. எகிப்தின் முதலாம் பாரோ அமென்ஹோடெப் மன்னரின் உடல் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்டது. அவரது உடல் மம்மி போன்று துணிகளால் மூடப்பட்டு இருந்தது.

  அவற்றை நீக்காமலே டிஜிட்டல் முறையில் இந்த மன்னரின் உடலை ஸ்கேனிங் மூலம் பெற்றுள்ளனர். இதற்காக ஆராய்ச்சியாளர்கள் அதி நவீன கம்ப்யூட்டர் டோபோகிராபி (computer topography) என்கிற ஸ்கேன் முறையை பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த மன்னரின் உடலானது பல்வேறு பொருட்களை கொண்டு அலங்கரித்து மூடப்பட்டதால் அவற்றை பிரிக்காமலே அவரது உடலுக்கு டிஜிட்டல் முறையில் உருவம் தந்துள்ளனர். இது தான் வரலாற்றில் முதல் முறையாக மூடப்பட்டிருந்த மம்மியை பிரிக்காமலே அதன் உருவத்தை டிஜிட்டல் முறையில் பெற்றதாகும்.

  ஹைரோகிளிஃபிக்ஸ் என்கிற எகிப்திய எழுத்துக்களை படிப்பதன் உதவியுடன், எகிப்திய ஆராய்ச்சியாளர்கள் கிமு 11 ஆம் நூற்றாண்டில் ஒரு முறை மூடப்பட்டிருந்த மம்மியை அவிழ்த்தனர் என்று சொல்லப்படுகிறது. கல்லறைக் கொள்ளையர்களால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய பாதிரியார்கள் புனர்பூசம் செய்ததாக நம்பப்படுகிறது. கெய்ரோ பல்கலைக்கழகத்தில் மருத்துவ துறையில் கதிரியக்கவியல் பேராசிரியரும், எகிப்திய மம்மி திட்டத்தின் கதிரியக்கவியலாளருமான டாக்டர் சஹர் சலீம் அவர்களின் கண்டுபிடிப்புகளின்படி, இந்த கோட்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

  இதை பற்றி அவர் கூறும்போது, "முதலாம் அமென்ஹோடெப் மன்னரின் மம்மி நவீன காலத்தில் அவிழ்க்கப்படவில்லை என்பது எங்களுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பைக் கொடுத்தது: அவர் முதலில் எப்படி மம்மியாகி புதைக்கப்பட்டார் என்பதை ஆய்வு செய்வது மட்டுமல்லாமல், அவர் இறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் அவர் எவ்வாறு நடத்தப்பட்டார் மற்றும் புனரமைக்கப்பட்டார் என்பதையும் தெரிந்து கொள்ள விரும்பினோம்.

  ALSO READ | சிறிய தவறால் பெண்ணிற்கு வந்த 4,500 மிஸ்டு கால் - என்ன நடந்தது?

  மம்மியை டிஜிட்டல் முறையில் அவிழ்த்து, அதன் மெய்நிகர் அடுக்குகளை - முகமூடி, கட்டுகள் மற்றும் மம்மியின் துணிகளை அவித்தல்' மூலம் இவரை பற்றி நாம் பலவற்றையும் அறிந்து கொள்ள முடிகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

  முதலாம் அமென்ஹோடெப் மன்னர் அவரின் தந்தையை போன்றே முக அமைப்பை கொண்டுள்ளார் என்று இதன் மூலம் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அவரது உயரம் 169 செ.மீ, நல்ல உடலமைப்பு, மற்றும் சிறந்த பற்களை கொண்டுள்ளார். பல தங்க மணிகளை அணிந்துள்ளார் என்பதையும் இந்த டிஜிட்டல் ஸ்கேன் முறையில் கண்டுபிடித்தனர்.

  First published: