ஹோம் /நியூஸ் /உலகம் /

வட கொரியாவில் பரவும் புதிய தொற்று! அச்சத்தில் அந்நாட்டு மக்கள்

வட கொரியாவில் பரவும் புதிய தொற்று! அச்சத்தில் அந்நாட்டு மக்கள்

வட கொரியா

வட கொரியா

North Korea: கோவிட் பரவலோடு சேர்த்து , சுகாதாரம் இல்லாத உணவுப்பொருளால் பரவும் குடல் தோற்று நோய் வடகொரியாவில் பதிவாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

உலகம் முழுவதும்  கோவிட் கொரோனா நோயின் அலைகளை எதிர்த்து போரிட்டு மீண்டு வரும் நேரத்தில் புதிதாக வட கொரியாவின் சில மாகாணங்களில் புதிய வகையான குடல் தொற்று நோய் பரவி வருகிறது.

வட கொரியா நாட்டில் இன்னும் கொரோனா அலைகளே முடிந்த பாடில்லை. தினசரி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. வட கொரியாவில் கடுமையான கட்டுப்பாடுகளும், ஊரடங்கு நிபந்தனைகளும் அமலில் தான் உள்ளது. இந்நிலையில் புதிதாக ஏற்பட்டுள்ள தொற்று மக்களிடையே பதற்றத்தை உருவாக்கி வருகிறது.

வெள்ளிக்கிழமை 23,160 பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.  ஏப்ரல் பிற்பகுதியில் இருந்து நாட்டில் மொத்த எண்ணிக்கையில்  4.58 மில்லியனுக்கு மேல் நோய் தொற்று பதிவாகியுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உள்ளது.

வடகொரியா நாட்டின் காலநிலை காரணமாகவே அதிகமாக காய்ச்சல் ஏற்படும் . அங்கே சரியான தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கிடையாது. சுத்தமான தண்ணீர் இல்லாமல் பொதுவாகவே பலருக்கு குடல் தொடர்பான நோய்களும், அதனால் காலரா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் வரும். இப்போது வந்துள்ள தொற்றும் காய்ச்சல் , வயிற்றுப்போக்கு என்று இருப்பதனால் எப்போதும் வரும் தொற்றா அல்லது வேறு ஏதேனும் தீவிர நோயா என்று ஆய்வுகள் நடந்து வருகிறது.

ஒரே பாலினத் திருமணங்களை சட்டபூர்வமாக்கும் தாய்லாந்து!

ஆனால் இப்போது வந்துள்ள தொற்று சுகாதாரம் இல்லாத உணவுப்பொருட்களால் பரவுவது மட்டும் கண்டறியப்பட்டுள்ளது. அதோடு வடகொரிய மாகாணங்களில் மட்டுமே இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது.

குடல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட 800 குடும்பங்களுக்கு வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் மருந்துகள்,அடிப்படைத்தேவைகள், உணவுப்பொருட்களை அனுப்பத் தயார்படுத்தி வருவதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதோடு தென் ஹ்வாங்கே மாகாணம் வட கொரியாவின் முக்கிய விவசாயப் பகுதியாகும். COVID-19 நோய்த்தொற்றை அடுத்து பெரும்  உணவு பற்றாக்குறையை அம்மாகாணம் சந்தித்து வருகிறது.

கோவிட் பரிசோதனை வசதிகளும் நாட்டில் மிகக்குறைவாகவே இருக்கிறது. இதனால் பலரது நோய்த்தொற்றைக் கண்டறியவே முடிவதில்லை என்ற விமர்சனங்களும் எழுகிறது.

First published:

Tags: Covid-19, Disease, Kim jan Un, North korea