சீனாவில் அதிவேகமாக பரவி வரும் BF.7 வகை கொரோனாவால் ஏற்பட போகும் பாதிப்புகள், இந்த வகை கொரோனாவின் அறிகுறிகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளன.
2019ல் கொரோனா பரவியதில் இருந்து பல வகைகளில் மாற்றமடைந்துள்ளது. அனைத்து மாறுபாடுகளில் ஓமிக்ரான் வகை பாதிப்பு ஓராண்டு மேலாக ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக உள்ளது. தற்போது சீனாவில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா பாதிப்பு ஒமிக்ரான் BF.7 வகை மாறுபாடு. இந்த வகை மக்களை எளிதில் பாதிக்கிறது.
தடுப்பூசியின் நிலையைப் பொருட்படுத்தாமல் இந்த மாறுபாடு தனிநபர்களை சமமாக பாதிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கைகளின்படி, BF.7 மாறுபாடு பெரும்பாலும் மேல் சுவாசக் குழாயைப் பாதிக்கிறது. காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் ஆகியவை BF.7 மாறுபாடு தொற்றுடன் தொடர்புடைய அறிகுறிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் அடுத்த 3 மாதங்களில் 60 சதவீத மக்கள் வரை தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படும் நிலையில், அடுத்த சில மாதங்களில் சுமார் ஒரு 10 லட்சம் இறப்புகள் ஏற்படலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் அதிவேகமாக கொரோனா பரவி வருவதால் அண்டை நாடுகள் அச்சமடைந்துள்ளன. குறிப்பாக இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வந்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு தயாராகி வருகிறது. அதன் எதிரொலியாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா அதிகாரிகளுடன ஆலோசனை நடத்தினார். சீனாவைத் தொடர்ந்து ஜப்பான், அமெரிக்கா, கொரியா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
Also Read : தொழிலதிபர் சேகர் ரெட்டியின் மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை மரணம்.!
இதற்கிடையே, சர்வதேச விமான பயணிகளை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வழிகாட்டுதல்கள் வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
சீனாவில் இருந்து வருவோருக்கு நாளை முதல் விமான நிலையங்களில் கட்டாய பரிசோதனை செய்ய வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பரிசோதனை செய்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பிக்க வலியுறுத்தியுள்ளது. சீனாவின் ஹாங்காங்கில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு விமான நிலையங்களில் பரிசோதனை தேவை என மத்திய அரசுக்கு தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் கடிதம் எழுதியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: China, Corona, Corona death