Corona| அச்சுறுத்தும் புதிய கொரோனா வகை C.1.2- ஆன்ட்டிபாடிகளை மீறி தொற்றும் அபாயம்

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸின் எந்த பகுதியில் இந்த மாறுபாடு நிகழ்கிறது என்றால், மனித உடலுக்குள் வைரஸ் ஊடுருவும் ஸ்பைக் பகுதியில் தான் இந்த மாறுபாடு நடைபெறுகிறது. ஸ்பைக் புரோட்டீன் தான் மனித உடலுக்குள் கொரோனா வைரஸ் ஊடுருவக் காரணம். இதில்தான் தற்போது மாறுபாடு அடைகிறது கொரோனா வைரஸ்.

  • Share this:
    கொரோனா வைரஸ் அது தொடங்கிய ஆதி தருணத்திலிருந்து பல்வேறு அவதாரங்களை எடுத்து வருகிறது, பலதரப்பட்ட வகையி உருமாறி வருகின்றன, இவை அனைத்தும் முந்தைய உருமாற்றத்தை விட அபாயகரமான தன்மைகளைக் கொண்டதாக இருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இதில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் கண்டுப்பிடிக்கப்பட்ட புதிய வேரியண்ட் C.1.2 வகை கொரோனா ஆபத்தானது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாக்சின் பாதுகாப்பையும் மீறி இது உடலுக்குள் ஊடுருவும் என்கின்றன இந்த ஆய்வுகள்.

    இந்த C.1.2 கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கடந்த மே மாதம் கண்டுப்பிடிக்கப்பட்டது. அதிலிருந்து இது சீனா, காங்கோ ஜனநாயக குடியரசு நாடு, மொரீஷியஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. சி.1 வேரியண்டை விட இந்த சி.1.2 என்ற வகை பெரிய அளவில் உருமாறியுள்ளது.

    மற்ற கவலையளிக்கக் கூடிய உருமாற்ற வைரஸ்களைக் காட்டிலும் இந்த சி.1.2 வகை அபாயகரமானது என்று தெரியவந்துள்ளது. மே மாதம் தென் ஆப்பிரிக்காவில் கண்டுப்பிடிக்கப்பட்ட போது 0.2% என்று இருந்த ஜெனோம்கள் ஜூனில் 1.6% ஆகவும் ஜூலையில் 2% ஆகவும் அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு 41.8 முறை இந்த வைரஸ் மாற்றம் அடைகிறது. இது தற்போதைய பிற வேரியண்டுகளை விட இருமடங்கு அதிவேக மாற்றமடைதலாகும்.

    கொரோனா வைரஸின் எந்த பகுதியில் இந்த மாறுபாடு நிகழ்கிறது என்றால், மனித உடலுக்குள் வைரஸ் ஊடுருவும் ஸ்பைக் பகுதியில் தான் இந்த மாறுபாடு நடைபெறுகிறது. ஸ்பைக் புரோட்டீன் தான் மனித உடலுக்குள் கொரோனா வைரஸ் ஊடுருவக் காரணம். இதில்தான் தற்போது மாறுபாடு அடைகிறது கொரோனா வைரஸ்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த வகை மாறுபாடு அடைந்த வைரஸ் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி, ஆண்டிபாடிகள், வாக்சின் தடுப்புகளையும் மீறி உடலுக்குள் ஊடுருவுகிறது என்கிறது இந்த ஆய்வு. ஏற்கெனவே ஆல்பா, பீட்டா வைரஸ் வகைகளுக்கு எதிரான ஆண்டிபாடிகளை நம் உடல் வளர்த்து கொண்டிருந்தாலும் இது அதை உடைத்து உள் நுழையும் தன்மை கொண்டது.
    Published by:Muthukumar
    First published: