ஹோம் /நியூஸ் /உலகம் /

2023 இல் சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை 10 லட்சம் வரை உயரும் - புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

2023 இல் சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை 10 லட்சம் வரை உயரும் - புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சீனாவில் கொரோனா பாதிப்பு

சீனாவில் கொரோனா பாதிப்பு

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் அதிகமானதாக இருக்கும். அதோடு சீன மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

அமெரிக்காவின் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் எவால்யூஷனின் புதிய கணிப்புகளின்படி சீனாவில் அடுத்து வரும் 2023ஆம் ஆண்டு சுமார் 10 லட்சம் கொரோனா மரணங்கள் நிகழலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

வூஹான் மாகாணத்தில் டிசம்பர் 2019 இல் உருவான கொரோனா பாதிப்பு உலகின் அனைத்து பகுதிகளுக்கும் பரவி சமூக கட்டுப்பாடுகளை விதிக்க வலி வகுத்தது. 2022 இல் தான் முழுமையாக உலக நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சீனாவில் மீண்டும் நோய் பரவல் தொடர்ந்து வருகிறது.

சீனாவில் கடந்த மாதம் தினசரி நோயத்தொற்று புதிய உச்சங்களைத் தொட்டது. அதன் விளைவாக, அங்கு நோய் பரவல் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறத் தொடங்கின. அதனால், சீன அரசு கொரோனா கட்டுப்பாடுகளை படிப்படியாகத் தளர்த்தி வருகின்றன.

இதையும் படிங்க: உக்ரைன் மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா...70-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் தாக்குதல்!

இந்நிலையில் குரூப்ஸ் புரொஜக்ஷன் ஆய்வுக் கூற்றுப்படி, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் அதிகமானதாக இருக்கும். அதோடு சீன மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டதிலிருந்து கொரோனா மரணங்களை சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. கடைசியாக டிசம்பர் 3ஆம் தேதி நிகழ்ந்த கொரோனா மரணங்களே பதிவு செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் சர்ச்சைக்குரிய ‘பூஜ்ய கொரோனா’ கொள்கை தளர்த்தப்பட்டதன் எதிரொலியாக தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அடுத்த ஆண்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 1.4 பில்லியன் (140 கோடி ) வரையும் நோய் தோற்றால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை 1 மில்லியன் (10லட்சம்) வரை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெள்ளிக்கிழமை தடுப்பூசிகளை அதிகரித்து வருவதாகவும், வென்டிலேட்டர்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் இருப்புக்களை உருவாக்குவதாகவும் கூறியது. ஆனால் இன்றும் சீன வெளிநாட்டு தடுப்பூசிகளை பயன்படுத்தவில்லை.

First published:

Tags: China, Corona, Covid-19