Home /News /international /

Deltacron : ஒமைக்ரானை தொடர்ந்து புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு... சைப்ரஸ் நாட்டில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தகவல்

Deltacron : ஒமைக்ரானை தொடர்ந்து புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு... சைப்ரஸ் நாட்டில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பு ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை தொடர்ந்து உருமாறி வருவதால் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பு ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை தொடர்ந்து உருமாறி வருவதால் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பு ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை தொடர்ந்து உருமாறி வருவதால் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

    தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    புதிய வகை வைரசுக்கு அறிவியலாளர்கள் டெல்டாக்ரான் என்று பெயர் வைத்துள்ளனர். முன்பு உருமாற்றம் அடைந்த டெல்டா மற்றும் ஒமைக்ரான் ஆகிய வைரஸ்களின் பண்புகளை ஒத்திருப்பதால் புதிய கெரோனா வேரியன்டிற்கு டெல்டாக்ரான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    டெல்டாக்ரானின் பாதிப்பு முதன் முறையாக மத்திய கிழக்கு நாடான சைப்ரஸில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பு ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை தொடர்ந்து உருமாறி வருவதால் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

    டெல்டாக்ரான் வைரஸை உறுதி செய்துள்ள சைப்ரஸ் நாட்டின் சுகாதார அமைச்சர் மிக்காலிஸ், தற்போதைய சூழலில் டெல்டாக்ரான் குறித்து மக்கள் பதற்றப்பட தேவையில்லை என்றும், புதிய வைரஸ் தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க : பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு: 22 பேர் உறைந்து உயிரிழப்பு


    கொரோனா, பாதிப்பிலிருந்து உலக நாடுகள் மீண்டு வந்த நிலையில், ஒமைக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவி மீண்டும் பொது முடக்கத்தை ஏற்படுத்தும் ஆபத்தை உருவாக்கியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் சில வாரங்களுக்கு முன்பு கண்டறியப்பட்ட இந்த வைரஸ், விறுவிறுவென வேகமாக உலக நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.


     கொரோனா பரவலின் 3வது அலை உலக நாடுகளை கடுமையாக தாக்கி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 20 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பதிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த நவம்பர் மாதம் புதிய வேரியன்டான ஒமைக்ரான் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் கொரோனா பாதிப்பு 270 சதவீதம் அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரம் கொரோனா தொடர்பான மரணங்கள் நாள் ஒன்றுக்கு 6,237 ஆக உலக நாடுகளில் உள்ளது. இது கடந்த 2020 அக்டோபர் மாதத்திலிருந்து பதிவாகி வரும் குறைந்த எண்ணிக்கையாகும். அதாவது, அக்டோபர் 2020-க்கு பின்னர் இறப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது.

    இதையும் படிங்க : உலக நாடுகளை மிரட்டும் கொரோனா... சராசரியாக நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பேர் வரை பாதிப்பு




    இவ்வாறாக இறப்பு எண்ணிக்கை குறைந்திருப்பதற்கு தடுப்பூசி பரவலாக்கப்பட்டது முக்கிய காரணமாக உள்ளது. ஏற்கனவே 2 டோஸ்களை பெரும்பாலானோர் இந்தியாவில் செலுத்தியுள்ள நிலையில், பூஸ்டர் டோஸை செலுத்திக் கொள்ளவும் மக்களில் சிலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் 3வது அலை குறைவதற்கு மார்ச் மாதம் ஆகும் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
    Published by:Musthak
    First published:

    Tags: Delta+ variant, Omicron

    அடுத்த செய்தி