ஆன்டிமைக்ரோபியல் ரெஸிஸ்டன்ஸுக்கு எதிராக புதிய ஆன்டிபயாடிக் கண்டுபிடிப்பு..

ஆன்டிமைக்ரோபியல் ரெஸிஸ்டன்ஸுக்கு எதிராக புதிய ஆன்டிபயாடிக் கண்டுபிடிப்பு..

காட்சி படம்

ஆன்டிமைக்ரோபியல் ரெஸிஸ்டென்ஸூக்கு எதிராக  ஆன்டிபயாடிக்கை கண்டுபிடித்து அமெரிக்கா ஆய்வாளர்கள் அசத்தியுள்ளனர்.

  • Share this:
உலகளவில் ஆன்டிமைக்ரோபியல் ரெஸிஸ்டன்ஸ் பிரச்சனை அதிகரித்து வருகிறது. அதற்கு முதலில் ஆன்டிமைக்ரோபியல் என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். சளிக் காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் வேலை செய்யாதபோது புதிய ஆன்டிபயாடிக் மாத்திரைகளை நாம் பயன்படுத்துவோம். அப்போது அந்த மாதிரை வேலை செய்யவில்லை என்று தான் எண்ணுவோம்.

ஆனால்,அதற்கு மாறாக நாம் ஏற்கனவே எடுத்துக்கொண்ட ஆன்டிபயாடிக்கை எதிர்க்கும் அளவுக்கு நம் உடலில் உள்ள பாக்டீரியாவோ, பூஞ்சையோ அல்லது வைரஸோ உருமாற்றம் அடைந்து பல்கி பெருகியிருக்கும். அந்த நிலையில் நாம் ஏற்கனவே எடுத்துக்கொண்ட ஆன்டிபயாடிக் மாத்திரைகளை இப்போதும் எடுத்துக்கொண்டால் சளி மற்றும் காய்ச்சலுக்கு அவை கேட்காது. இந்த வகை பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைகளின் உருமாற்றமே ஆன்டிமைக்ரோபியல் ரெஸிஸ்டன்ஸ் என அழைக்கப்படுகின்றன.

இதுமட்டுமல்லாது, இந்தியாவில் 60 விழுக்காடுக்கும் அதிகமாக சந்தைகளில் புழங்கும் ஆன்டிபயாடிக் மாத்திரைகள் முறையான அனுமதி பெறாத மாத்திரைகள் எனக் கூறப்படுகிறது. இவைகளை உண்ணும்போது, எந்த நோய்க்கு எதிராக எடுத்துக்கொள்கிறோமோ, அந்த நோயின் வைரஸ் உருமாற்றமடைந்து ஆன்டிமைக்ரோபியல் ரெஸிஸ்டென்டாக  மாறுகின்றன. சில மருத்துவர்களும் சளி மற்றும் காய்ச்சலின் தன்மையை பரிசோதிக்காமல் குறைவாகவோ அல்லது தேவைக்கு அதிகமாகவோ அன்டிபயாடிக்கொடுப்பதால் ஒருவரின் உடலின் இயல்பாகவே ஆன்டிமைக்ரோபியல் ரெஸிஸ்டென்ட் உருவாகிவிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதனால், மீண்டும் நோயினால் பாதிக்கப்படும் அதேநபர் வேறொரு ஆன்டிபயாடிக் மாத்திரை அல்லது வீரியம் அதிகமான ஆன்டிபயாடிக்கை எடுத்துக்கொள்ள நேரிடுகிறது. இன்னும் சில மருத்துவர்கள், யூகத்தின் அடிப்படையில் கொடுக்கும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளும் ஆன்டிமைக்ரோபியல் ரெஸிஸ்டென்ட் அதிகரிக்க காரணமாக அமைகின்றன. இப்பிரச்சனை இந்தியா மட்டுமின்றி உலகளாவிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் இப்பிரச்சனை கவனிக்கத்தக்க வகையில் இருப்பதாக ஏற்கனவே மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்நிலையில், இப்பிரச்சனைக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் புதிய ஆன்டிபயாடிக்கை கண்டுபிடித்துள்ளனர். அவர்களின் கண்டுபிடிப்பு நேச்சர் இதழில் வெளியாகியுள்ளது. அதில், ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள புதிய சேர்மங்கள் ஒரே நேரத்தில் பான்டிரக் ரெஸிஸ்டென்ட் பாக்டீரியல் பாத்கான்ஸ்  மற்றும் ஆன்டிமைக்ரோபியல் ரெஸிஸ்டென்ட் ஆகியவற்றை கொல்வதாக தெரிவித்துள்ளனர். பிடெல்பியாவில் உள்ள விஸ்டார் இன்ஸ்டியூட் தடுப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சிகிச்சை மைய மருத்துவ ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த பரோக் டோடிவாலா  இது குறித்து பேசும் போது, "நோய்தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க கடினமான புதிய மூலக்கூறுகள் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டோம்.

அப்போது, நுண்ணுயிர் எதிர்ப்பிகள், நியூக்ளிக் அமிலம் மற்றும் புரத தொகுப்பு, உயிரணு சவ்வு கட்டமைத்தல் மற்றும் வளர்சிதை மாற்ற பாதைகள் உள்ளிட்ட அத்தியாவசிய செயல்பாடுகளை நுண்ணுயிரிகள் குறிவைப்பதை கண்டுபிடித்தோம். பின்னர், வளர்ச்சிதை மாற்ற அமைப்பு வழியில் இதனை சரிசெய்யும் முயற்சியில் இறங்கினோம். அதில், IspH என்சைம் மைக்ரோபியலின் வழியை அடைப்பதுடன், அதனை அழிக்கவும் செய்தது.

இதனை நோயாளிகளிடம் பரிசோதனை செய்தபோது ஆன்டிமைக்ரோபியலுக்கு எதிராக சிறப்பாக செயலாற்றியதுடன் பாக்டீரியாக்களையும் அழித்தது", என்றார்.

ஆய்வாளர்களின் இந்த புதிய கண்டுபிடிப்பு வளர்ந்து வரும் ஆன்டிமைக்ரோபியல் ரெஸிஸ்டென்ட் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளதாகவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
Published by:Tamilmalar Natarajan
First published: