• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ஆண் இளம் பருவத்தினரின் பெண்ணியமயமாக்கலைத் தடுக்கும் திட்டம் - சீனாவில் புயலைக் கிளப்பும் புதிய கல்விக் கொள்கை அறிவிப்பு!

ஆண் இளம் பருவத்தினரின் பெண்ணியமயமாக்கலைத் தடுக்கும் திட்டம் - சீனாவில் புயலைக் கிளப்பும் புதிய கல்விக் கொள்கை அறிவிப்பு!

சீனாவில் புயலைக் கிளப்பும் புதிய கல்விக் கொள்கை

சீனாவில் புயலைக் கிளப்பும் புதிய கல்விக் கொள்கை

'Feminisation' என்பது அத்தனை மோசமான சொல்லா? என சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

  • Share this:
சீனாவின் கல்வி அமைச்சகம் ஒரு புதிய கல்விக் கொள்கை குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டது, இது சிறுவர்களை மேலும் ‘ஆண்மையானவர்களாக’ மாற்ற ஊக்குவிக்கும். சீன இளைஞர்கள் ‘மிகவும் பெண் தன்மை’ கொண்டவர்களாக ஆகிவிட்டதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஆண் முன்மாதிரிகள் (ரோல் மாடல்) கட்டுக்கோப்பான உடலமைப்புடன் வலிமைமிக்க, ராணுவ ஹீரோக்களை போல இருக்கவில்லை என சீன அரசு சிறிது காலமாகவே உணர்த்தி வந்தது. கால்பந்தாட்ட அபிமானியான சீன அதிபர் ஜின் பிங் கூட விளையாட்டு நட்சத்திரங்களை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தான் சீன கல்வி அமைச்சகம் கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

ஆண் இளம் பருவத்தினரின் பெண்ணியமயமாக்கலைத் தடுக்கும் திட்டம் (Proposal to Prevent the Feminisation of Male Adolescents) என்ற தலைப்பிலான அந்த அறிக்கையில் ஆண்மை வளர்ப்பை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

சீனாவில் புயலைக் கிளப்பும் புதிய கல்விக் கொள்கை: Photo Credits - AP


ஆண் இளம் பருவத்தினரிடையே பெண் தன்மை அதிகரித்துவிட்டதாகவும், உடற்கல்வி படிப்புகள் மூலம் ஆண் இளம் பருவத்தினரிடையே ஆண் தன்மை அதிகரிக்க வகை செய்ய வழிவகை உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கால்பந்தாட்டம் போன்ற ஆக்ரோஷமான விளையாட்டுகளை ஊக்குவிப்பதன் மூலம் இதனை சரிசெய்ய முடியும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்த பரிந்துரைக்கப்பட்ட கொள்கை, பள்ளிகள் வழங்கும் உடற்கல்வி படிப்புகளை சீர்திருத்துவதையும் ஆசிரியர்களின் ஆட்சேர்ப்பை மேம்படுத்துவதையும் வலியுறுத்துகிறது. முன்னாள் விளையாட்டு வீரர்களை உடற்கல்வி ஆசிரியர்களாக நியமிப்பதை ஊக்குவிப்பதாக உள்ளது.

சீனாவின் செனட் உறுப்பினரான ஸி ஸிஃபு முன்னர் குறிப்பிடுகையில், சீன ஆண்களிடையே பலவீனமான, பயமுறுத்தும் மற்றும் சுய குறைதல் பண்புகள் அதிகரித்துவிட்டதாகவும், இதற்கு காரணம் அம்மா, பாட்டி போன்ற வீட்டில் உள்ள பெண்மணிகளால் அவர்கள் வளர்க்கப்படுவது எனவும் அவர் கூறியிருந்தார்.

சீனாவில் புயலைக் கிளப்பும் புதிய கல்விக் கொள்கை


சீன கல்வித்துறையின் இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பை பெற்றுள்ளது. சீனாவின் ஃபேஸ்புக் என சொல்லப்படும் வெய்போ சமூக ஊடகங்களில் அரசின் இந்த அணுகுமுறைக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

'Feminisation' என்பது அத்தனை மோசமான சொல்லா? என சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர். உணர்வுப்பூர்வமாக இருப்பதும் மென்மையாக நடந்துகொள்வதும் மனித பண்பு தான், சீன அரசின் சுற்றறிக்கை ஆணாதிக்க அல்லது பாலினவாத அறிவிப்பு என சாடி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: