ஹோம் /நியூஸ் /உலகம் /

6 மாதங்களில் மனித மூளையில் சிப் பொருத்தும் பணிகளை தொடங்க எலான் மஸ்க் திட்டம்

6 மாதங்களில் மனித மூளையில் சிப் பொருத்தும் பணிகளை தொடங்க எலான் மஸ்க் திட்டம்

மாதிரி படம்

மாதிரி படம்

6 மாதங்களில் மனித மூளையிலும் சிப் பொருத்தும் பணிகள் நடைபெறும் என எலான் மஸ்க் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaUSAUSAUSA

6 மாதங்களில் மனித மூளையில் சிப் பொருத்தும் பணிகள் தொடங்கப்படும் என்று நியூராலிங்க் தலைவர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

எலான் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம், மனித மூளையில் சிப் பொருத்தும் ஆய்வில் ஈடுபட்டுள்ளது. அதன்படி முதற்கட்ட சோதனை குரங்குகளை வைத்து நடைபெற்றது.இதில் கணினி மூலம் மூளையின் செயல்பாட்டை கட்டுப்படுத்தலாம் என்று உறுதிபடத் தெரியவந்தது.

இதையும் படிங்க: உக்ரைனை எளிதில் வென்றுவிடலாம் என புதின் தப்புக்கணக்கு போட்டுள்ளார் - ஜோ பைடன் பரபரப்பு பேச்சு

இந்தநிலையில் தற்போது பேசிய எலான் மஸ்க், 6 மாதங்களில் மனித மூளையிலும் சிப் பொருத்தும் பணிகள் நடைபெறும் என்றார்.இந்த சிப் மூலம் எண்ணங்கள் வழியாக கணினியுடன் நேரடியாக தொடர்பு கொள்ளமுடியும் எனவும், விரைவில் தானும் ஒரு சிப்பை தமது மூளையில் வைத்துக்கொள்ளப் போவதாகவும் மஸ்க் கூறினார்.இந்த சோதனைகளுக்கு 6 மாதங்களில் அனுமதி கிடைக்கும் என்று மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Artificial Intelligence, Elon Musk