• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • 'பூமியின் ஏஞ்சல்' - நடக்கமுடியாமல் போன நாயை குணப்படுத்திய நர்ஸை கொண்டாடும் நெட்டிசன்கள்..

'பூமியின் ஏஞ்சல்' - நடக்கமுடியாமல் போன நாயை குணப்படுத்திய நர்ஸை கொண்டாடும் நெட்டிசன்கள்..

நாய் ஒன்றுக்கு மருத்துவர்கள் அளிக்கும் தொடர் சிகிச்சையால், அது எழுந்து ஓடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

  • Share this:
மனிதனுக்கும் நாய்க்கும் இடையேயான உறவு கொஞ்சம் ஸ்பெஷலானது எனலாம். மனிதர்களின் அன்புக்கும் சொல்லுக்கும் கட்டுப்பட்டு நாய் மிகவும் அன்புடன் இருக்கும். அதனால், நாயை நன்றியுள்ள விலங்கு என அழைக்கிறோம். மனிதர்களுக்கு பல்வேறு இக்கட்டான சூழல்களில் உயிரைக்கொடுத்து நாய்கள் உதவியிருப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால், நாய்களுக்கு மனிதர்கள் உதவுவது போன்ற காட்சிகள் எப்போதாவது ஒருமுறை தான் இணைய உலகில் வைரலாக பரவும். அப்படியான ஒரு வீடியோ தான் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முன்னாள் அமெரிக்க கூடைப்பந்தாட்ட அணி வீரரான ரெக்ஸ் சாம்பியன் (Rex Chapman) தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். சுமார் ஒரு நிமிடம் இருக்கும் அந்த வீடியோவில், முடமான நாய் ஒன்றுக்கு தொடர் பயிற்சி அளிக்கின்றனர். முதலில் நடக்க முடியாமல் இருக்கும் அந்த நாயை பெல்ட் உதவியுடன் தாங்கிப் பிடித்தவாறு நடக்க பயிற்சி அளிக்கின்றனர். மசாஜ், உடற்பயிற்சி என தொடர் பயிற்சிகளால், சீரான கால இடைவெளியில் அந்த நாய் உடல் நலம் தேறுகிறது. மெல்ல மெல்ல நடக்கவும் தொடங்குகிறது.

வீடியோவின் இறுதியில் அந்த நாய் முழுமையாக நடக்க ஆரம்பித்து ஓடவும் செய்கிறது. நாய்களின் மீது அலாதி பிரியம் வைத்திருப்பவர்கள் என்றால், நிச்சயம் இந்த வீடியோ அவர்களின் கண்களை குளமாக்கும். மருத்துவர் ஒருவரும், நர்ஸூம் இணைந்து, அந்த நாய்க்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து, நோயில் இருந்து மீட்டுள்ளனர். அவர்களின் இந்த செயலுக்கு இணையத்தில் பெரும் வரவேற்பும், அன்பும் கிடைத்துள்ளது. நெட்டிசன்கள் பலரும் அவர்களின் மனிதாபிமான செயலுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

நோய் வாய்ப்பட்டு முடங்கியிருந்த மனிதர்கள் தொடர் சிகிச்சையால் அதில் இருந்து மீண்டு, நலம்பெற்று வாழ்வதை பார்த்திருக்கிறோம். ஆனால், நோய்வாய்ப்பட்டு முற்றிலும் முடங்கிய நாய் ஒன்று மீண்டு எழுந்து முதன்முறையாக  ஓடுவதை பார்ப்பதாகவும் பலரும் தெரிவித்துள்ளனர். இதுவரை சுமார் 3 மில்லியன் பார்வைகளை அந்த வீடியோ கடந்துள்ளது. ஒரு லட்சத்துக்கும் மேலான லைக்குகளையும், 15 ஆயிரத்துக்கும் மேலான ரீ டிவீட்டுகளும் அந்த வீடியோவுக்கு கிடைத்துள்ளது. அந்த நாய்க்கு மருத்துவம் பார்த்த நர்ஸை 'பூமியின் ஏஞ்சல்' என நெட்டிசன் வர்ணித்துள்ளார்.

இந்த வீடியோவுக்கு கீழ் மற்றொரு வீடியோவை பகிர்ந்துள்ள மற்றொரு நெட்டிசன், அதில் கண்பார்வை மற்றும் செவித்திறன் இழந்த நாய்க்கு டச் சிக்னல் (touch signal)-ஐ கற்றுக்கொடுக்கிறார். அந்த பெண் என்ன சொல்ல வருகிறார் என்பதை தொடு உணர்வு மூலம் நாயும் புரிந்துகொள்கிறது. இதுபோன்று விலங்குகள் மீது அளவற்ற அன்பு செலுத்துபவர்களுக்கு சொர்க்கத்தில் தனியிடம் உண்டு எனவும் இணையவாசிகள் உணர்ச்சிப்பெருக்கில் கூறி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ram Sankar
First published: