`ஐயோ நாங்க அவங்க இல்லை’ டிவிட்டரில் கதறிய ராபின்ஹூட் சொசைட்டி! - என்ன நடந்தது?

`ஐயோ நாங்க அவங்க இல்லை’ டிவிட்டரில் கதறிய ராபின்ஹூட் சொசைட்டி! - என்ன நடந்தது?

டிரேடிங் செயலி ( Trading App) செய்த தவறுக்கு ராபின்ஹூட் சொசைட்டியை நெட்டிசன்கள் தவறுதலாக வறுத்தெடுத்துள்ளனர்.

டிரேடிங் செயலி ( Trading App) செய்த தவறுக்கு ராபின்ஹூட் சொசைட்டியை நெட்டிசன்கள் தவறுதலாக வறுத்தெடுத்துள்ளனர்.

  • Share this:
இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமை தலைமையிடமாகக் கொண்டு ராபின்ஹூட் சொசைட்டி ('Robin Hood Society) செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் ட்விட்டர் பக்கத்தை சுமார் 400 பேர் மட்டுமே பின்தொடர்ந்து வந்தனர். ஆனால், ஜனவரி 28-ம் தேதிக்குள் ராபின்ஹூட் சொசைட்டி கணக்கை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 58,000 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் அந்த சொசைட்டியைச் சேர்ந்த நபர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டபோது ராபின்ஹூட் ஆப் (Robinhood app) என்ற டிரேடிங் ஆப் ஒன்று இருந்தது தெரியவந்துள்ளது. 

டிரேடிங் செயலி திடீரென தனது முதலீட்டாளர்களை Nokia, Bed Bath & Beyond, AMC, Koss Corporation, Naked Brand Group, BlackBerry and Express Inc உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளை வாங்குதற்கு கடும் கட்டுபாடுகளை விதித்துள்ளது. இதனால், கடுப்பான வர்த்தகர்கள் ராபின்ஹூட் செயலியை தொடர்புக்கொண்டு விளக்கம் பெற முயற்சித்துள்ளனர். அப்போது, டிவிட்டரில் தவறுதலாக ராபின்ஹூட் ஆப்-க்கு பதிலாக ராபின்ஹூட் சொசைட்டியின் டிவிட்டர் பக்கத்தை பின்தொடர்ந்து கேள்விகளை எழுப்பியுள்ளனர். 

இதற்கு விளக்கம் அளித்துள்ள ராபின்ஹூட் சொசைட்டி, தாங்கள் ராபின்ஹூட் டிரேடிங் ஆப் இல்லையென்றும், இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ராபின்ஹூட் சொசைட்டி என்றும் கூறியுள்ளது. மேலும், ராபின்ஹூட் செயலியை கடுமையாக விமர்சனம் செய்துள்ள அந்த சொசைட்டி, இது தொடர்பாக அந்த செயலிக்கு மெசேஜ் அனுப்புமாறு ட்விட்டரை கேட்டுக்கொண்டுள்ளது. அந்த நிறுவனம் செய்யும் தவறுகளுக்கு மற்றவர்கள் பதில் அளிக்க வேண்டும் என நினைக்கிறார்கள் என்றும் ராபின்ஹூட் சொசைட்டி கூறியுள்ளது.

ராபின்ஹூட் சொசைட்டியின் சமூகவலைதளங்களை கவனித்துவரும் லிசா டக்ளஸ் (Lisa Douglas), திடீரென குவிந்த மெசேஜ் மற்றும் டிவிட்டுகளால் அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து பிபிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள அவர், ராபின்ஹூட் செயலியை பற்றி முன்பே அறிந்திருப்பதாகவும், அந்த ஆப் தொடர்பாக அவ்வப்போது சில மெசேஜ்கள் வரும் எனவும் கூறியுள்ளார். ஆனால் இந்த முறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மெசேஜ்கள் குவிந்தது வியப்பை ஏற்படுத்தியாக லிசா டக்ளஸ் கூறியுள்ளார்.  

சில ஸ்டாக்ஸ்களை டிரேடிங் செய்ய ராபின்ஹூட் டிரேடிங் ஆப் திடீரென கட்டுபாடு விதித்ததால், வர்த்தகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்துவதாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த செயலியின் செயல்பாட்டால் Reddit community -யின் சிறிய முதலீட்டாளர்கள் நல்ல லாபத்தை பெற்றனர். Game stop- ன் பங்குகள் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து ஜனவரி 28-ம் தேதிக்குள் ஒரு பங்கின் விலை 5 டாலரில் இருந்து 450 டாலர் வரை உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது,
Published by:Ram Sankar
First published: