2.0 படத்தைப் போல் கொத்துக்கொத்தாக இறந்த பறவைகள்: 5ஜி சோதனை காரணமா?

செத்து விழுந்த பறவைகள்

நெதர்லாந்தில் பறவைகள் கொத்துக்கொத்தாக உயிரிழந்த அதே நேரம் ஹாக் நகரில் 5ஜி ரேடியோ அலைகள் அனுப்பப்பட்டு சோதனை செய்யப்பட்டன. அதனால்தான் பறவைகள் இறந்திருக்கக்கூடும் என்று புகார் எழுந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ரஜினிகாந்தின் 2.0 திரைப்படத்தில் வருவது போன்று, செல்போன் கதிர்களால் பறவைகள் உயிரிழந்த புகார் ஒன்று நெதர்லாந்து நாட்டில் எழுந்துள்ளது. அந்நாட்டில் நூற்றுக்கணக்கான பறவைகள் உயிரிழந்ததற்கு 5ஜி அலைக்கற்றை சோதனையே காரணம் என்று புகார் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் 2.0. செல்போன் கதிர்வீச்சுக்களால் பறவைகளுக்கு ஏற்படும் இன்னல்களை கதைக்களமாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 4 ஜி வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் செல்போன் சேவையை பல நாடுகள் 5ஜி வேகத்தில் தொடங்கி விட்டன. அதிவேகம், துல்லியம் என செல்போன் தொழில்நுட்பத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் தொழில்நுட்பமாக கருதப்படும் 5ஜி தொழில்நுட்பத்தின் சோதனை நெதர்லாந்து நாட்டில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

மேற்கு நெதர்லாந்து நகரமான ஹாக் (Hague) என்ற நகரத்தில் கடந்த அக்டோபர் மாதம் 26-ம் தேதி ஹூகைய்ன்ஸ் பூங்காவில் திடீரென நூற்றுக்கணக்கான பறவைகள் செத்து விழுந்தன. அருகில் இருந்த குளத்தில் நீந்திக்கொண்டிருந்த அன்னப்பறவைகள் தங்கள் கழுத்துகளை தண்ணீருக்குள் மூழ்கடித்தன.

கொத்துக்கொத்தாக உயிரிழந்த பறவைகள்


இந்த பறவை உயிரிழப்புக்கு காரணம் புரியாத நிலையில் இருந்த  நகராட்சி அதிகாரிகள், பறவை ஆராய்ச்சியாளர்கள், உணவுத்துறை வல்லுநர்கள் என ஒரு பட்டாளமே இறந்து போன பறவைகளை ஆய்வுக்குட்படுத்தின.

பறவைகள் வைரஸ் தாக்கி இறக்கவில்லை. நோய் வயப்பட்டிருக்கவில்லை. விஷத் தாக்குதல் இல்லை. ஆனால் கொத்துக் கொத்தாக பறவைகள் செத்துப் போனது ஏன் என்ற குழப்பம் மட்டுமே நீடித்து வருகிறது.

இதனிடையே மருத்துவம் சார்ந்த செய்திகளை வெளியிட்டு வரும் எரின் எலிசபெத் வலைப்பக்கத்தில், பறவைகள் உயிரிழந்த அதே நேரத்தில் ஹாக் நகரில் 5ஜி ரேடியோ அலைகள் அனுப்பப்பட்டு சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்வுகளே பறவைகள் உயிரிழப்புக்கு காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பறவைகள் உயிரிழந்ததையும், 5ஜி சோதனையையும் தொடர்புபடுத்தி எழுதப்பட்ட கட்டுரை சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

நெதர்லாந்தில் ஆங்காங்கே இறந்து கிடக்கும் பறவைகள்


பறவைகள் உயிரிழப்புக்கு 5ஜி சோதனை காரணமா என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை எனினும், செல்போன் கதிர்வீச்சுக்கு எதிராக பரப்புரை செய்து வரும் இயற்கை ஆர்வலர்கள் இந்த கட்டுரையை தங்களுக்கு சாதகமான சான்றாக முன்னிறுத்துகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சி தேவைதான். ஆனால் நம் கண்ணை தொலைத்தா ஓவியம் வாங்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Also see...
Published by:Vaijayanthi S
First published: