பத்திரிகையாளர் கொலை தொடர்பான நிகழ்ச்சி நீக்கம் - நெட்பிளிக்ஸ்க்கு குவியும் கண்டனங்கள்

ஹாசன் மின்ஹஜ் உடன் தேசபக்தச் சட்டம்’ என்று ஹாசன் தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சி நெட்பிளிக்ஸில் தொடராக வெளிவருகிறது.

Web Desk | news18
Updated: January 2, 2019, 11:34 AM IST
பத்திரிகையாளர் கொலை தொடர்பான நிகழ்ச்சி நீக்கம் - நெட்பிளிக்ஸ்க்கு குவியும் கண்டனங்கள்
ஹாசன் மின்ஹஜ்
Web Desk | news18
Updated: January 2, 2019, 11:34 AM IST
பத்திரிகையாளரைக் கொலை செய்த விவகாரம் தொடர்பாக சவுதி அரேபிய அரசை விமர்சனம் செய்து உருவாக்கப்பட்ட காமெடி நடிகர் ஹாசன் மின்ஹஜின் நிகழ்ச்சியை நெட்பிளிக்ஸ் அதன் தளத்திலிருந்து நீக்கியுள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி, வாஸிங்டன் போஸ்ட்டில் பணியாற்றிவந்தார். அவர், சவுதி அரேபிய அரசையும், அந்நாட்டின் இளவசரன் முகமது பின் சல்மானையும் கடுமையாக விமர்ச்சித்துவந்தார். இந்தநிலையில், துருக்கியிலுள்ள சவுதி அரேபியத் தூதரகத்தில்வைத்து கசோகியை கொடூரமாகக் கொலை செய்தனர்.

பத்திரிகையாளர் கஷோகி (Photo: AP)


சவுதி அரேபிய அரசின் இந்தச் செயலுக்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தநிலையில், இந்திய வம்சாவளி அமெரிக்க இஸ்லாமிய காமெடி நடிகர் ஹாசன் மின்ஹஜ், சமீபத்தில் கசோகி கொலை விவகாரத்தில் சவுதி அரேபிய அரசை விமர்ச்சித்து நிகழ்ச்சி செய்திருந்தார். ’ஹாசன் மின்ஹஜ் உடன் தேசபக்தச் சட்டம்’ என்று ஹாசன் தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சி நெட்பிளிக்ஸில் தொடராக வெளிவருகிறது.

அந்த நிகழ்ச்சியின் கடந்த எபிஸோடில், ‘பத்திரிகையாளர் கசோகி மரணம் தொடர்பாக சவுதி அரசைக் கடுமையாக விமர்சித்தார்’. அதனையடுத்து, சவுதி அரேபிய தகவல் தொலைதொடர்புத்துறை நெட்பிளிக்ஸில் புகார் தெரிவித்தது. மேலும், இணையதளத்தில் வெளிவரும் படைப்புகளுக்கான கட்டுப்பாடுகள் என்ன என்றும் கேள்வி எழுப்பியது. சவுதி அரேபிய அரசின் எதிர்ப்பைத் தொடர்ந்து ஹாசன் மின்ஹஜ்ஜின் நிகழ்ச்சி நெட்பிளிக்ஸ் தளத்திலிருந்து நீக்கப்பட்டது. நெட்பிளிக்ஸின் இந்தச் செயலுக்கு வாஸிங்டன் போஸ்டின் பத்திரிகையின் எடிட்டர் கரின் அட்டியா கண்டனம் தெரிவித்துள்ளார். இது மூர்கத்தனமான செயல் என்று பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்த நெட்பிளிக்ஸ், ‘உலக அளவில் நாங்கள் படைப்புச் சுதந்திரத்தை மதிக்கிறோம். சவுதி அரேபியாவிலிருந்து மட்டும்தான் நிகழ்ச்சி நீக்கப்பட்டுளது. சட்டப்படியான முறையான கோரிக்கை வந்த பிறகே, நிகழ்ச்சி தளத்திலிருந்து நீக்கப்பட்டது. நெட்பிளிக்ஸிலிருந்து நீக்கப்பட்ட அந்த நிகழ்ச்சியை உலகின் மற்றப் பகுதியில் பார்க்கலாம். சவுதி அரேபியாவிலும் யூட்யுப்பில் காணமுடியும். உலகில் பத்திரிக்கை சுதந்திரம் வழங்குவதில், 180 நாடுகளில் சவுதி அரேபியா 169 இடத்தைப்பெற்றுள்ளது.

Whoa. #Netflix takes down an episode of @hasanminhaj's comedy show critical of #Saudi Arabia 

Also see:

First published: January 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...