பதற்றமான, கணிக்க முடியாத குணம் கொண்டவர் ராகுல் காந்தி - A Promised Land புத்தகத்தில் பராக் ஒபாமா..

ராகுல் காந்தி ஒரு பதற்றமான,  கணிக்க முடியாத குணம் கொண்டவர் என அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தனது A Promised Land எனும் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

பதற்றமான, கணிக்க முடியாத குணம் கொண்டவர் ராகுல் காந்தி - A Promised Land புத்தகத்தில் பராக் ஒபாமா..
ராகுல் காந்தி-ஒபாமா
  • News18 Tamil
  • Last Updated: November 13, 2020, 10:11 AM IST
  • Share this:
ராகுல் காந்தி ஒரு பதற்றமான,  கணிக்க முடியாத குணம் கொண்டவர் என அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தனது A Promised Land எனும் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
A Promised Land என்னும் அந்த புத்தகத்தில், ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் பல தலைவர்கள் குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார் என  நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு 2009 முதல் 2017 வரை ஆட்சியில் இருக்கும் போது.ஒபாமா அமெரிக்காவின் அதிபராக இருந்தார். ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், அப்போதைய பாதுகாப்பு செயலாளர் பாப் கேட்ஸ் மற்றும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன் ஆகியோரைப் பற்றியும்  அப்புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார்.ஒபாமாவின் புத்தகத்தை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், மன்மோகன் சிங் மற்றும் ராகுல்காந்தி குறித்து ஒபாமா குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்னவெனில், “பாதுகாப்பு செயலாளர் பாப் கேட்ஸ் மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இருவரும் ஒருமைப்பாட்டைக் கொண்டவர்கள் எனவும், ராகுல் காந்தி பற்றி குறிப்பிடும்போது ஒரு பதற்றமான, அறியப்படாத குணம் கொண்டவர. மாணவராக இருக்கும் ஒருவர், அவர் பாடங்களை செய்துமுடித்து ஆசிரியரைக் கவர ஆர்வமாக இருந்தார். ஆனால் பாடத்தை அறிய அதிக ஆர்வம் அற்றவராக இருப்பவரைப் போன்றவர் ராகுல் காந்தி’ எனக் குறிப்பிட்டுள்ளார்.


ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில், காங்கிரஸின் துணைத் தலைவராக இருந்த ராகுல் காந்தி, டிசம்பர் 2017-இல் ஒபாமாவின் இந்திய பயணத்தின் போது ஒபாமாவை சந்தித்தார். ராகுல் காந்தி இந்த சந்திப்பு குறித்து டுவீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published: November 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading