ஒரு வாரத்தில் 2,559 பேர் பாதிப்பு- நேபாளத்தை வாட்டிவதைக்கும் டெங்கு!

கொரிய நிறுவனம் ஒன்றின் உதவியோடு காத்மண்டு முழுவதும் தடுப்பு மருந்து அடிக்கும் பணி அதிதீவிரமாக நடைபெற்று வருகிறது.

Web Desk | news18
Updated: September 10, 2019, 9:01 PM IST
ஒரு வாரத்தில் 2,559 பேர் பாதிப்பு- நேபாளத்தை வாட்டிவதைக்கும் டெங்கு!
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: September 10, 2019, 9:01 PM IST
ஆசிய நாடுகள் பலவற்றிலும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. நேபாளத்தில் ஒரே வாரத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பருவமழைக் காலம் என்பதால் கொசுக்கள் மூலமாகப் பரவும் டெங்குவின் தாக்கம் இம்முறை அதிகப்படியாகவே உள்ளது. கொசுக்களில் ஏடிஸ் வகை கொசுக்களே இந்த டெங்கு வைரஸை பரப்பும் வேலையில் உள்ளன. இவ்வகை கொசுக்கள் மூலம் வைரஸ் பரவினால் காய்ச்சல், தலைவலி, வாந்தி, மயக்கம், தசை மற்றும் மூட்டு வலி, தோல் பிரச்னை ஆகியன ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

கடந்த சில நாட்களில் மட்டும் டெங்குவால் பாதிக்கப்பட்டு 3 பேர் நேபாளத்தில் உயிரிழந்துள்ளனர். ஒரே வாரத்தில் 2,559 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நேபாளத்தில் மக்கள் மத்தியில் பெரும் பயம் ஏற்பட்டுள்ளது. பல தடுப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் பிரச்னையின் வீரியம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.


கொரிய நிறுவனம் ஒன்றின் உதவியோடு காத்மண்டு முழுவதும் தடுப்பு மருந்து அடிக்கும் பணி அதிதீவிரமாக நடைபெற்று வருகிறது. நேபாளத்திலேயே அதிகபட்சமாக மக்வான்பூர் பகுதியில் 546 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பார்க்க: குழந்தைகளைக் கொடுமை செய்யாதீர்கள்- நைஜீரிய ராணுவத்துக்கு மனித உரிமை ஆணையம் வேண்டுகோள்

அரசு உதவி பெறும் பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு!

Loading...

First published: September 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...