நேபாள நாட்டில் கடந்த ஜனவரி மாதம் 15ஆம் தேதி கோர விமான விபத்து ஏற்பட்டது. அந்நாட்டின் நாட்டின் பொக்ரா விமான நிலைய ஓடுபாதையில் மோதி Yeti ஏர்லைன்ஸ் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. 72 இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தில் 68 பயணிகள் பயணிகள் உள்ளிட்ட 72 பேர் சென்றுள்ளனர்.
மலைகள் சூழ்ந்த பொக்ரா விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது ஓடு பாதையில் மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 72 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விமானத்தில் இந்தியர்கள் 5 பேர் பயணித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த கோர விமான விபத்து குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், 5 பேர் கொண்ட குழு முதல்கட்ட அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், விமான விபத்திற்கு மனித தவறு காரணமாக இருக்க வாய்ப்புகள் உள்ளதாக விசாரணை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். விமானத்தை தரையிறக்க ஏர் டிராஃபிக் கன்ட்ரோலர் 10:57 மணிக்கு அனுமதி வழங்கினார். அப்போது பைலட் ப்ளையிங் இன்ஜின்களில் இருந்த மின்சாரம் கிடைக்கவில்லை என்று இரு முறை தெரிவித்துள்ளார்.
இந்த தகவலும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல், விபத்து நிகழ்ந்த நேரத்தில் வானத்தில் மேகங்கள் குறைவாகவே இருந்தன. 6 கிமீ தொலைவு வரை தெளிவான பார்வை கிடைத்திருந்தது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட விசாரணை அறிக்கையில் கூடுதல் தகவல்கள் வெளிவரும் எனத் தெரிவித்துள்ளனர். சர்வதேச சிவில் விமான விதிகளின் படி, விபத்து நிகழ்ந்த 30 நாள்களுக்குள் முதல் கட்ட அறிக்கையை வெளியிட வேண்டும். அதேபோல், ஒரு வருடத்திற்குள் இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Flight Accident, Flight Crash, Nepal