Home /News /international /

இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை - நேபால் அரசு அறிவிப்பு !!

இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை - நேபால் அரசு அறிவிப்பு !!

மாதிரி படம்

மாதிரி படம்

இந்தியாவிலிருந்து வரும் பயணிகளால் பரவும் தொற்றைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Nepal , India
    நேபாளத்தில் இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து சென்ற 4 சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த தடை போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேபாளத்தில் தற்போது கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் மேற்கு நேபால் பைதாடி மாவட்டத்தில் உள்ள ஜூலாகாட் எல்லைப்  வழியாகச் சுற்றுலாப் பயணிகளாக வந்த நான்கு இந்தியர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்களைத் திரும்பி அனுப்பியுள்ளனர்.

    நேபாளத்தில் கொரோனா தொற்று சமீப காலமாக அதிகமா பரவுவதால் எல்லையில் வருபவர்களுக்குச் சோதனை செய்யப்படுகிறது. அதில் இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    Also Read : சீனாவில் மீண்டும் ஒரு புதிய வைரஸ் தொற்று... - 35 பேருக்கு பாதிப்பு உறுதி

    மேலும் நேபாள மக்களில் இந்தியாவிலிருந்து திரும்பியவர்களில் அதிகம் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதார அலுவலகத்தின் தகவல் அதிகாரி பிபின் லேகாக் கூறியுள்ளார்.

    இதனால் இந்தியாவிலிருந்து வருபவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். நேபாளத்தில் செவ்வாய் அன்று 1090 புதிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அதுவே கடந்த ஆறு மாதங்களில் பதிவான அதிக அளவு ஆகும். அதே நாளில் 2 பேர் தோன்றினால் இறந்த நிலையில் 438 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். நேபாளத்தில் தற்போது மொத்தம் 5,874 பேர் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Published by:Janvi
    First published:

    Tags: Corona, Nepal

    அடுத்த செய்தி