இந்தியா எல்லைகளில் படைகளைக் குவிக்க விருப்பம் இல்லை - நேபாளம்

இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமே தீர்த்து கொள்ள விரும்புவதாகவும், எல்லையில் படைகளை குவிக்க விருப்பமில்லை எனவும் நேபாள துணை பிரதமர் ஈஷ்வர் பொக்கிரில் தெரிவித்துள்ளார்.

இந்தியா எல்லைகளில் படைகளைக் குவிக்க விருப்பம் இல்லை - நேபாளம்
நேபாள எல்லை
  • Share this:
எல்லைப் பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக இந்தியா பதில் தரும் என காத்திருப்பதாக நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் க்யாவாளி தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை தொடர்பாக கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்திலும் அண்மையில் மே மாதத்திலும் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் எல்லையில் இந்திய பகுதியாக உள்ள Limpiyadhura, Lipulekh, Kalapani ஆகியவற்றை சொந்தம் கொண்டாடும் நேபாளம் 3 பகுதிகளையும் சேர்த்து நாட்டின் புதிய வரைபடத்தை தயார் செய்து வெளியிட்டது. மேலும் அதற்கு ஒப்புதல் தரும் விதத்தில் அரசியலமைப்பை திருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த வரைபடத்தை வெளியிட்ட சிறிது நேரத்தில் மத்திய அரசு கடும் எதிர்ப்பை நேபாளத்துக்கு தெரிவித்தது. இதனால் இருநாடுகள் இடையே கசப்பான சூழல் உருவாகியுள்ளது.

மேலும் நேபாளத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்தியா பேச்சுவார்த்தை தொடர்பாக இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...திமுகவின் களவீரர்... தலைநகர அரசியலில் அழிக்க முடியாத தடம்...! யார் இந்த அன்பழகன்...?

 

First published: June 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading